ஷட்டப் யுவர் மவுத்… சட்டிப் பானையை கவுத்… மதன் கார்க்கியை வாரிய தயாரிப்பாளர் !

நவரச நாயகன் கார்த்திக்கின் இடத்தை அவரால் மட்டுமே நிரப்ப முடியும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். அந்த நம்பிக்கையை முறியடிக்க இன்னும் ஒரு நடிகரும் வரவில்லை. அந்த காதல் துறுதுறு பிளாட்டில் அவரது மகனான கவுதம் கார்த்திக்தான் குடியேறுவார் போலிருந்தது நேற்று நாம் பார்த்த இரண்டு பாடல் காட்சிகள். ஷட் அப் யுவர் மவுத்… சட்டிப்பானை கவுத்… என்கிற பாடலும், உங்க அப்பா என்ன அப்பா டக்கரா? என்ற பாடலும் கவுதமை ஏகத்திற்கும் ரசிக்க வைத்தது. படத்தின் பெயர் என்னமோ ஏதோ.

மகனை ஊர் உலகமே சேர்ந்து வாழ்த்துவதை நெஞ்சு கொள்ளாமல் ரசித்தார் கார்த்திக். அடிக்கடி தன் மகனை மை பிரண்ட் அவர் சொன்னதை ஆச்சர்யம் விலகாமல் ரசித்தது கூட்டம். கும்கி போன்ற படங்களில் மெலடிகளாலும் நாட்டுபுற பாடல்களாலும் கவர்ந்த இமான்தானா இவர் என்று சொல்ல வைத்தன அந்த பாடல்கள். அவ்வளவு ஆக்ரோஷமான வெஸ்டர்ன் அடியும் இருந்தது அந்த பாடல்களில். அதே நேரத்தில் மெலடி ராஜாவான அவரது தரத்தையும் விட்டுக் கொடுக்கவில்லை. பார்வையற்றவரான வைக்கம் விஜயலட்சுமியை அவர் பாட வைக்கும் காட்சியொன்றை திரையிட்டார்கள். மனசெல்லாம் வழிய வழிய பொழிந்த மெலடி அது.

அதிருக்கட்டும்… ஷட்டப் யுவர் மவுத்… சட்டிப்பானையை கவுத்… என்கிற வார்த்தை விளையாட்டையெல்லாம் மதன் கார்க்கி பேனாவிலிருந்து எதிர்பார்க்காத மொத்த சனமும் குத்த வச்சு உட்கார்ந்து குமுறியது ஒரு பக்கம் என்றால், அந்த மேடையில் மைக்கை பிடித்த கே.ராஜன் என்கிற தயாரிப்பாளர், இவரை பாராட்டிய வஞ்சப்புகழ்ச்சியை எந்த தமிழால் வர்ணிக்க? மதன்கார்க்கி… கவிப்பேரரசோட புள்ளை நீங்க. அற்புதமான தமிழ் வரிகளை போட்டிருக்கீங்க. அருமை அருமை..’ என்றார் அவர். அவர் நிஜமாகவே பாராட்டுவதாக நினைத்து எழுந்து நின்று இரு கரம் கூப்பி அதை ஏற்றுக் கொண்டார் மதன் கார்க்கியும். அவ்வளவு வெள்ளந்தி புள்ளையா நீங்க?

தெலுங்கில் வெளியான ஒரு படத்தைதான் தமிழில் ரீமேக்கியிருக்கிறார் டைரக்டர் ரவி தியாகராஜான். பிரபல சினிமா யூனிட் நிறுவனமான ரவிபிரசாத் நிறுவனம்தான் இந்த படத்தை தயாரிக்கிறது. முதலில் அந்த தெலுங்கு படத்தை பார்க்க வந்தார்களாம் கார்த்தியும் அவரது மகன் கவுதமும். முன் சீட்டில் இருந்த அப்பாவை படம் முடியும்போது காணல. பார்த்தா சீட்டுக்கு கீழே குனிஞ்சி விழுந்து விழுந்து சிரிச்சிட்டு இருந்தாரு. அப்பவே இந்த படத்தில் நடிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன் என்றார் கவுதம்.

கடலில் மூழ்கிய இந்த ரொமான்ஸ் குழந்தையை என்னமோ, ஏதேவென விட்டுவிடாமல் இழுத்துப்பிடித்த ரவி பிரசாத்துக்குதான் அவரது ரசிகர்கள் நன்றி சொல்ல வேண்டும்.

Ennammo Yedho audio launched amidst fanfare

The audio launch of Gautham Karthik’s Ennammo Yedho was held on 17th Jan. at Kamala Theatre, Chennai. Who is who celebrities including T. Siva, producer Gnanavel Raja, director K. Rajan, yesteryear veteran actor Karthik accompanied by his son Gautham Karthik, and members of the cast and crew participated in full strength.

Madhan Karky has written thinking out of the box in sync with current mood and use of words by the youth in his lyrics in the film which was tuned by D. Imman quite melodiously. The two songs the makers have showcased to the press said it all how Karky and D. Imman have worked in making rhythmic as well as well sung melodies. We are glad that D. Imman has given such a lilting tunes in the film which will go a long way in stabilising himself with his already established name.

Director K. Rajan while speaking expressed his happiness in writing the lyrics in literary Tamil, to which the lyricist Karky while acknowledging the hidden criticism said that he wrote the songs in relevance to the present day generation.

The makers have also showed the video as to how Imman was able to make Vaikom Vijayalakshmi a visually challenged singer to sing the song in the album. Imman was full of praise during his speech for Vijayalakshmi for her talents in vocal as well as her performance with Veena.

Gautham Karthik said that he laughed aloud when he and his father was shown the Telugu version of the film. And during the climax he noticed his father was bending himself down to laugh whole-heartedly. “I have decided that I should do the film at that moment itself”, Gautham added.

Gautham Karthik with his inquisitive eyes and amenable nature would sure win the hearts of Tamil audience soon, through this film.

Director Ravi Thiagarajan thanked the producers – Ravi Prasad Productions – and his team for their support in making the film. He said the veteran actor Prabhu will be seen in a different role that we have not seen him before, adding the actor himself was very excited to do the role.

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சசிகுமாருடன் உரசல் படப்பிடிப்பிலிருந்து வெளியேறிய சந்தானம்

சமீபகாலமாகவே டைரக்டர் மற்றும் நடிகர் சசிகுமாரின் நடவடிக்கைகள் வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. சமீபத்தில் ஆனந்த விகடனில் அவர் அளித்த பேட்டியை சமூக வலைதள அன்பர்கள் சரியாக படிக்கவில்லை...

Close