ஹன்சிகாவுக்காக காத்திருக்கும் மூட்டைப்பூச்சிகள்….

தமிழ்சினிமா ஒரு காலத்தில் பொள்ளாச்சியில்தான் குடியிருந்தது. வெற்றிப்படங்கள் பலவும் அங்கேதான் படமாக்கப்பட்டன. ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், மணிவண்ணன், ஆகியோரின் படங்கள் பலவும் அங்குதான் எடுக்கப்பட்டன. சின்ன சின்ன லாட்ஜுகள், பொட்டிக்கடைகள், ஓட்டல்கள் என்று பிசியாக இருக்கும் அவற்றில் இன்றைய முன்னணி நடிகர்கள் பலரும் சாப்பிட்டு உறங்கிய காலமெல்லாம் உண்டு. லொக்கேஷன் மேனேஜர்கள் என்று சொல்லப்படும் ‘லோக்கல் கைடுகள்’ இந்த சினிமாக்காரர்களை நம்பியே ‘நன்றாக’ வாழ்ந்தார்கள். ஆனால் இந்தியாவின் உலகமயக்கமாக்கல் கொள்கை கோடம்பாக்கத்திலும் எட்டிப் பார்த்ததன் விளைவு எல்லா சினிமாக்காரர்களும் பொள்ளாச்சியை மறந்துவிட்டு எங்கெங்கோ ஓடினார்கள்.

எப்போது தமிழ்சினிமாவின் பட்ஜெட் ஐம்பது கோடிக்கும், அறுபது கோடிக்கும் தாவியதோ, இவர்களின் மனசும் அதற்கேற்ப தாவியது. மும்பை, ஐதராபாத், லண்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று சொந்த ஊரை அப்போவென விட்டுவிட்டார்கள். இவ்வளவுக்கு நடுவிலும் மதுரையை பின்னணியாக கொண்ட படங்கள் எக்கச்சக்கமாக வந்ததுதான் கொஞ்சம் ஆறுதல்.

பழைய காலம் எப்போ வருமோ என்று கவலையோடு கொட்டாவி விட்டுக் கொண்டேயிருந்தது பொள்ளாச்சி. யார் எங்கு ஓடினாலும் சுந்தர்சிக்கும் பொள்ளாச்சிக்கும் இடையிலான நட்பு மட்டும் விலகவே இல்லை. அவரும் பொள்ளாச்சியை விடுவதாக இல்லை. தற்போது இவரே ஹீரோவாக நடிக்கும் ‘அரண்மனை’ படத்தின் ஷுட்டிங் பொள்ளாச்சியில் ஏக அமர்க்களமாக துவங்கிவிட்டது. நாயகி ஹன்சிகா மோத்வானிக்கு பொள்ளாச்சியின் மூட்டைப்பூச்சி லாட்ஜ் ஒன்று தஞ்சம் கொடுத்திருப்பதாக தகவல் கசிகிறது. முன்னதாக ஒவ்வொரு மூட்டைப்பூச்சியையும் தனித்தனியாக கண்டுபிடித்து நசுக்கியிருப்பார்கள் என்பது வேறு விஷயம்.

தப்பித் தவறி தப்பித்த அந்த மூட்டைப்பூச்சிகள் தனது அத்தனை நாள் பசியையும் போக்கிக் கொள்ள ஹன்சிகாவை விழுந்து பிடுங்கக்கூடும். அதிர்ஷ்டக்கார அந்த பூச்சிகளை விலை கொடுத்து வாங்கியாவது வீட்டில் வளர்க்க பிரியப்படும் அன்பர்கள் உடனே கிளம்பி பொள்ளாச்சிக்கு ஓடுங்க…

Hansika at Pollachi for Aranmanai shoot

Pollachi was the hub of the film industry in lates 70s and 80s when every film would be shot here, every hero and heroine would be visiting here for the shoots. Pollachi’s economy was at its best during those times. But when Indian cinema opened up in the late 90s, every one spread their wings across the globe. Despite this, Sundar C has a special affinity with Pollachi, as he regularly shoots his film at least some portions, here. This time too, he commenced his project, Aranmanai, playing the lead, while directing it too. Hansika is the female lead. However, for Hansika it would be with a different stay here. It is learnt that the hotels here although have ACs, also have bed-bugs. So the bugs would be happy to enjoy Hansika’s blood too, unless the smart director makes special arrangements for her comfortable stay. Of course, he would do it in his own interest, that Hansika looks good the next day morning with a good night sleep.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அப்போ நடந்தது வேற… இப்போ நடக்கறது வேற… – அர்ஜுனும் ஆஞ்சநேயர் கோவிலும்

கொஞ்சம் பழைய சங்கதிகள் தெரிந்தவர்களுக்கு தற்போது கட்டப்பட்டு வரும் அர்ஜுனின் ஆஞ்சநேயர் கோவில் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமளிக்கும். அறியாதவர்களுக்கு எப்படியோ? போகட்டும்... நாம் அறிந்ததை சொல்லிவிடுவதுதானே நல்லது. சென்னை...

Close