ஹன்சிகாவை ‘சாச்சுபுட்டாரு’ தமன்னா…
சிம்புவின் ‘கேரம் போர்டு’ விளையாட்டு தெலுங்கு தேசம் வரைக்கும் தெரிந்திருப்பதுதான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். இவரது விரல் வித்தைக்கு ஆளாகியிருக்கிற கேரம் காயான ஹன்சிகாவை ஒரு படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடிக்க கேட்டார்களாம். சந்தோஷமாக தலையாட்டிய ஹன்சி, மற்ற விஷயங்களை அவர் பேசுவார் என்று லைனை சிம்புவிடம் கொடுக்க, அவர் போட்ட கண்டிஷனால் கதி கலங்கி போனாராம் இயக்குனர்.
‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, திரும்ப கூப்பிடுறேன்’ என்றவர் அதற்கப்புறம் ஹன்சிகா பக்கம் திரும்பவே இல்லையாம். இப்போது தனக்கு பதிலாக தமன்னா ஒப்பந்தமாகியிருக்கிறார் என்கிற தகவலை கேட்டு வெம்பி போயிருக்கிறார் ஹன்சிகா. அடுத்த வீட்டு வாசலில் அரளிப் பூ கோலம் போட்ட தமன்னாவின் முகத்தில் ‘சாய்ச்சுட்டோம்ல…’ என்கிற திமிர் இப்போது.
ஹ்ம்ம்ம்ம், இப்படிதான் ஓடிக்கிட்டு எல்லா மீட்டரும்!