ஹன்சிகாவை தேடி அமெரிக்காவுக்கு பறந்தார் சிம்பு

காதல், சந்திரயானில் ஏறி செவ்வாய் கிரகத்திற்கு கூட போக வைக்கும் வல்லமையுடையது.

யார் இந்த விஷயத்தை உணர்ந்திருக்கிறார்களோ, இல்லையோ? சிம்பு நன்றாக உணர்ந்தவர். விண்ணை தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவை தேடி கேரளாவுக்கே போவாரில்லையா? அது போல அவர் நயன்தாராவை காதலித்துக் கொண்டிருந்தபோது சிங்கப்பூருக்கு போயிருந்தார். தன்னிடம் சொல்லாமல் போன நயன்தாராவை அங்கு ஒவ்வொரு ஓட்டலாக தேடி தேடி ஒரு ஓட்டலில் கண்டே பிடித்துவிட்டார். அதற்கப்புறம் அங்கு நடந்த சந்தேக சொற்றொடர்கள், தாறுமாறான வார்த்தை பிரயோகங்கள்தான் அந்த புனிதமான காதலுக்கே சங்கு ஊதியதாக சொல்வார்கள் சினிமாக்காரர்கள்.

இப்போது இது ஹன்சிகாவுக்கான முறை…

வேறொன்றுமில்லை, புத்தாண்டை கொண்டாடவும் அப்படியே வேறொரு படத்தில் நடிக்கவும் அமெரிக்கா கிளம்பியிருக்கிறார் ஹன்சிகா. அவர் போய் நான்கு நாட்கள் ஆவதற்குள் ஹன்சிகாவை தேடி அமெரிக்காவுக்கு பறந்திருக்கிறார் சிம்பு. அவர் தங்கியிருக்கும் இடத்தை சிம்பு அறிந்தாரா? அல்லது தேடி அலைந்து கண்டு பிடிப்பாரா என்பதெல்லாம் இப்போது தெரிந்திருக்க நியாயம் இல்லை.

திரும்பி வரும் போது இருவரும் கண்ணீரும் கம்பலையுமாக வராமல் கட்டிப்பிடித்துக் கொண்டு வந்தால் அது காதலுக்கு மரியாதை. இல்லையென்றால் காதலுக்கு பேண்டேஜ்! க்ளைமாக்ஸ் எதுவாக வாய்த்திருக்கிறதோ?

Simbu flown to Los Angeles to meet Hansika

Love is one which take people anywhere across the planets. It is the strength of ‘love’ which make even impossible things to make possible. It is one such instance we have noticed and will like to share with our readers.

Hansika who took brief vacation to celebrate the New Year with her friends had flown to US few days back and she tweeted the same in her twitter page. Simbu too had flown to US as he had to shoot there for another film. Combining the shoot he is also planning to meet Hansika there.

We only wish that both Simbu and Hansika should come entwining together, unlike had it happened few years earlier when Simbu and Nayanthara returned from Singapore separately, in sorrow, after breaking their relationship.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இதுதான் நயன்தாராவின் மான் கராத்தே!

ஸ்டண்ட் யூனியன் ஆட்களில் சிலருக்கு இனி கொஞ்ச நாளைக்கு டிஞ்சரும் தேவையிருக்காது. ஒத்தடத்திற்கும் வேலையிருக்காது. நயன்தாராவிடம் அடிவாங்கி சாய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் அவர்கள். பொதுவாகவே சினிமாவில்...

Close