ஹன்சிகாவை தொடர்ந்து தமன்னா… சிவகார்த்திகேயனின் ‘மடக்கல்’ மர்மம்!

ஏன்ங்க… சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்தா என்ன தப்பு? இன்றிருக்கும் பெரிய நடிகர்கள் யாருக்கும் சளைத்தவரில்லை சிவா. அவரது படத்தின் கலெக்ஷன் தெரியுமா உங்களுக்கு? என்றெல்லாம் வெளிப்படையாக பேட்டியளிக்கிற அளவுக்கு சிவாவின் சகாவாகிவிட்டார் ஹன்கிகா மோத்வானி. மான் கராத்தே படத்தில் இவர்தான் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி. இந்த வயிற்றெரிச்சலை தாங்கிக் கொள்ள முடியாத மற்ற ஹீரோக்கள் தனியாக ரூம் போட்டு அழுவதெல்லாம் கோடம்பாக்கத்தில் நடக்கும் அன்றாட சங்கதியாகிவிட்டது.

இந்த நோக்காட்டில் மேலும் ஒரு கரண்டி மிளகாய் பொடியை அள்ளிப் போட்டிருக்கிறார் தமன்னா. விரைவில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரப்போகிறார் அவர். இந்த படத்தை லிங்குசாமி தயாரிக்கிறார்.

பையா படத்திலிருந்தே தமன்னாவின் நெருக்கமான பிரண்ட்ஸ் லிஸ்டுக்குள் வந்துவிட்ட லிங்குசாமி, அவரது தமிழ்ப்பட என்ட்ரியை நன்றாகவே கவனித்துக் கொண்டிருக்கிறார். அஜீத்துடன் வீரம் படத்தில் நடித்து வரும் தமன்னாவை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக்கினால் என்ன என்று அவர் யோசித்தாராம். முறைப்படி தமன்னாவுக்கு தகவலும் அனுப்பப்பட்டது. விஷயத்தை காதில் வாங்கிய அடுத்த வினாடியே யெஸ்… என்றாராம் தமன்னா.

சிவகார்த்திகேயன் தனது நெஞ்சை மறுபடியும் ஒருமுறை புடைத்துக் கொண்டு நடப்பதாக கேள்வி. இருக்காதா பின்னே?

Tamannah to romance Siva Karthikeyan   

Siva Karthikeyan is sure enjoying his extended honey-moon in Kollywood with ‘hat-trick’ hits and earned a nick name dependable hero. Why not, his collections speak better than many of the popular heroes, here, says Hansika Motwani, who has teamed up with Siva, for Maan Karate. So, after Hansika, Siva Karthikeyan will now romance Tamannah, for a film produced by Lingusamy. To get the nod from Tamannah was very easy for him, as Lingusamy was one of the important personality in Tamannah’s circle, and secondly working with Siva will have double benefits, a sure hit and sure ticket to popularity. Well, it looks it is Siva Karthikeyan’s time to reap the harvest!

Read previous post:
‘நயன்தாரா வேணாம்….’ ஹீரோ பதிலால் நயன் அதிர்ச்சி

கருவ மரத்தில் செஞ்ச கட்டில்னா கனவு கூட முள் முள்ளா வருமா என்ன? அப்படிதான் வந்திருக்கிறது நயன்தாராவுக்கு. அவர் ஆசைப்பட்ட (நடிக்க மட்டும்தான்) ஒரே ஒரு ஹீரோ...

Close