ஹன்சிகாவை படுத்தி எடுத்த குதிரை
புயல் வந்து சூறையாடிவிட்டு போன உத்ராஞ்சல் மாநிலத்தில் ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கும் உயிரே உயிரே படத்தின் ஷுட்டிங் நடைபெற்றது.
ஒரு ஆஜானுபாகுவான குதிரையில் ஏறி ஹன்சிகா வருவது போல காட்சி. எந்நேரமும் விளையாட்டு நினைப்பிலேயே இருக்கும் குதிரை போலிருக்கிறது அது. ஹன்சிகாவை முதுகில் ஏற்றிக் கொள்வதற்குள் பயங்கர விளையாட்டு காட்டி விட்டதாம். அப்புறமும் மூன்று பேர் துணையுடன் அவரை குதிரையேற்றியிருக்கிறார்கள். ஷாட்டின் போது அவர்களும் கூடவே நிற்க முடியாதே? அவர்கள் நகர்ந்தால் குதிரை குதிக்கிறதாம்.
எப்படியோ பயத்தை முகத்தில் காட்டாமல் சுமார் ஏழு மணி நேரம் குதிரையோடு மல்லுக்கட்டி நடித்துக் கொடுத்தாராம் ஹன்சிகா. அவரது ஒத்துழைப்பை ஊருக்கே சொல்லி சந்தோஷப்படுகிறார் படத்தின் இயக்குனர் சத்யம் ராஜசேகர்.
இப்படி படுத்தி வச்ச குதிரையை போய், கொடுத்து வச்ச குதிரைன்னு சொல்லவே சங்கடமா இருக்கு.
Hansika took 7 hours for horse riding shoot?
Recently Uyire Uyire shooting was held at Uttarkhand, directed by Sathyam Rajasekar. Hansika riding a horse shot got to be taken and when the horse was brought to the spot, it refused to Hansika mount on it. After some brave efforts Hansika mounted on the horse with the help of couple of members of the shoot. But the moment they leave the horse started jumping giving a torrid time for Hansika and others. For this one shot the members had to spend about 7 hours. Sathyam Rajasekar was effusive in his praise for Hansika, saying that she did not show the fear in her face while shooting and cooperated with the team fully for taking the shot to his satisfaction.