‘ ஹேர் டை ’ முயற்சி? காம்ப்ரமைஸ் ஆனார் கவுதம்!

சஹாரா கம்பெனியின் சிஇஓ சட்டையில் கருப்பு மை அடிக்கப்பட்ட போது சாதாரண பிரஜைகளுக்கு எவ்வளவு சந்தோஷம் வந்ததோ, அவ்வளவு சந்தோஷம் வரும்… அஜீத்தின் தலைக்கு கருப்பு மை அடித்தாலும்! அவரை இளமையாக பார்ப்பது அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, விஜய் ரசிகர்களுக்கும் கூட பிடிக்கும். அடுத்து அஜீத் நடிக்கும் படத்தை கவுதம்மேனன் இயக்குகிறார் அல்லவா?

இப்படத்தில் அஜீத்தை சிக்ஸ் பேக்கிலும், ஸ்லிம் பேக்கிலும் காட்ட பெரிதாகவே மெனக்கெடுகிறார் அவர். கவுதமின் ஆசையை நிறைவேற்ற ஜிம்மே கதி என்று கிடக்கவும் ஆரம்பித்திருக்கிறார் அஜீத். எல்லாம் சரி… அந்த தலை? வெள்ளை நரையில் கருப்பு நுரையை பரவவிட்டு அந்த கேசத்தை கருகருவாக்கிவிட வேண்டும் என்று துடியாய் துடித்த கவுதம் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஹேர் டைகளை வரவழைத்து முயற்சித்தாராம்.

எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததாக வருகிறது தகவல். வேறு வழியில்லாமல் அஜீத்தை அப்படியே சால்ட் பெப்பர் லுக்கிலேயே காட்ட முடிவெடுக்கப்பட்டிருக்கிறதாம் இப்போது. எப்பவுமே ‘வெண்’ தாமரைக்குதான் அடிமையாகிறாள் சரஸ்வதி. இந்த மாற்ற முடியாத வெண் நரைதான் பணக்கார கடவுளான லட்சுமியின் ஆசையாக இருக்கும் போலிருக்கு.

இருந்துட்டுதான் போகட்டுமே!

Ajith is likely to appear in ‘salt and pepper’ look in Gautham’s film

The media is full of stories how Ajith is hitting the gym to satisfy the director Gautham Menon who will direct his next film. He is also said to be showing six packs in the film along with slim and stylish look, with completely black hair. It was also said that Ajith was doing all possible to dye his hair in black without getting affected by any allergic substance. However we now hear that despite the best efforts by the actor importing all latest hair dyes, it was not possible to make him appear in ‘black’. With no alternative, the director Gautham Menon has agreed to have the salt and pepper look for Ajith in the film, say sources that are in the know-how of the things. One may have to wait to see if it is indeed true or just to hype the curiosity for the film.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
hokenakkal II

[nggallery id=289]

Close