எல்லா ‘டிஸ்க்’கும் இறைவனுக்கே!

ஆஸ்கர் தமிழன் ஏ.ஆர்.ரஹ்மான் ஆன்மீக விஷயத்தில் எப்படி? அதிலென்ன சந்தேகம். அதற்கும் சேர்த்து ஒரு ஆஸ்கர் கொடுக்கலாம் அவருக்கு! ரஹ்மானின் ‘கரண்ட்’ எங்கே உற்பத்தியாகிறது என்றால் சட்டென்று சொல்லிவிடலாம், தொழுகையிலும், தொட்டுத் தழுவுகிற இசையிலும்தான் என்று! மின்வெட்டே இல்லை இந்த கரண்ட்டுக்கு. அப்படியிருந்தும் ஒருநாள் இந்த இசை மின்நிலையம் அவரது ஸ்டுடியோவையே அதிர வைத்தது. அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்த அந்த ஆன்மீக சம்பவம் அப்படியே இங்கே-

தமிழில் வெளிவந்த உயிரே படம்தான் ‘தில்சே’ என்ற பெயரில் உருவாகிக் கொண்டிருந்தது. முழு படத்தையும் முடித்துவிட்ட டைரக்டர் மணிரத்னம் பின்னணி இசை சேர்ப்பு பணியை முடுக்கி விட்டிருந்தார். குயில் உறங்குகிற நேரத்தில்தான் ஆந்தை விழிக்கும் என்பது பொது விதி. ஆனால் ரஹ்மான் என்ற இசைக்குயிலும், ஆந்தையும் ஒரே நேரத்தில் விழித்திருப்பதுதான் இசை விதி.

தொடர்ந்து நான்கு நாட்கள். பிரமாதமான இசைக்கருவிகள், ஏராளமான மியூசிக் நோட்ஸ்கள் என்று அமர்க்களப்பட்டது ஸ்டுடியோ. து£க்கம் இல்லை. தும்மல் இல்லை. அவ்வளவு ஏன்? சாப்பாட்டையே கூட மறந்து இசைக்குள் மூழ்கியிருந்தது ரஹ்மானின் ஸ்டுடியோ. ராப்பகலாக இசைக்குள் மூழ்கியிருந்த இவர்களுக்கு ஐந்தாம் நாள்தான் அதிர்ச்சி காத்திருந்தது.

அதை சொல்வதற்கு முன் இன்னொரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். ரஹ்மானிடம் உதவியாளராக இருந்தவரும் தற்போது தனியாக வந்து படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருப்பவருமான தாஜ்நு£ருக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது அங்கே. இசைக்கலைஞர்கள் வாசிக்கும் எல்லா இசையும் ஒரு ஹாட் டிஸ்க்கில் சேமிக்கப்படும். கிடைக்கிற நேரத்தில் இந்த ஹாட் டிஸ்க்கில் இருக்கிற இசையை கம்ப்யூட்டரில் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ளுகிற வேலைதான் அவருக்கு. ஆனால் நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த இசை யாகத்தில் தும்மல் கூட இல்லை என்று சொல்லிவிட்டேனே? தாஜ்நு£ருக்கு மட்டும் எப்படி நேரம் கிடைக்குமாம்.

எல்லாம் முடியட்டும். பார்த்துக் கொள்ளலாம் என்று இவரும் அமைதிகாக்க, மறுநாள் விடியல் நு£ருக்கு நல்லபடியாக அமையவில்லை. மணிரத்னம் வந்திருந்தார். ஒருபுறம் திரையில் படம் ஓட ஹாட் டிஸ்கில் இருக்கிற பின்னணி இசையும் சேர்ந்து ஒலிக்க வேண்டும்.

திட்டமிட்டபடி கம்ப்யூட்டரில் இணைத்தால் ஹாட் டிஸ்க் ஓப்பன் ஆகவே இல்லை. நான் ட்ரை பண்ணுறேன், இல்லையில்லை… இப்படி செஞ்சா வந்திரும் என்று கம்ப்யூட்டர் கீ போட்டை ஆப்ரேட் பண்ணத் தெரிந்த அத்தனை இசைஞர்களும் முயல, ‘ஞே…’ என்று விழித்தது அது.

கழற்றி மாட்டி பிரித்து கோர்த்து… இப்படி சிறுபிள்ளையிடம் சிக்கிய பொம்மை போலானது ஹாட் டிஸ்க். சுமார் ஒரு மணி நேரம் இப்படியே கழிந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டேயிருந்த ரஹ்மான், கொஞ்சம் அதை கொடுங்க என்று ஹாட் டிஸ்க்கை கையில் வாங்கினார். நு£ர்… நீ மட்டும் என்னோட வா என்று அவரையும் அழைத்துக் கொண்டார். இங்கேயே இருங்க வந்துர்றேன் என்று காரை கிளப்பியவர் போய் நிறுத்திய இடம் திருவல்லிக்கேணியிலிருக்கிற தர்கா ஒன்றின் வாசலில்.

ஐநாக்ஸ் தியேட்டருக்கு எதிர் சந்தில் நுழைந்தால் ஐம்பதடி து£ரத்தில் வலது புறத்திலிருக்கிற தர்காதான் அது. கையோடு கொண்டு போயிருந்த ஹாட் டிஸ்க்கை சமாதியில் வைத்து விட்டு மனமுருக ஐந்து நிமிடம் கண்மூடி தியானித்தவர், எவ்வித டென்ஷனும் இல்லாமல் அங்கிருந்து கிளம்பினார்.

ஸ்டுடியோவுக்கு திரும்பியது வண்டி. ம்… இப்போ போடு. ரஹ்மான் கட்டளையிட, சின்ன சந்தேகத்தோடும் ஆறுதலோடும் ஹாட் டிஸ்க்கை இணைத்து ஓப்பன் செய்தார் தாஜ்நு£ர். என்ன ஆச்சர்யம்? ஓப்பன் ஆகிவிட்டது. அதற்கு பிறகும் தாமதிப்பாரா என்ன? சார் பேக் அப் எடுத்துக்குறேன் என்று அத்தனையையும் கம்ப்யூட்டரில் மாற்றிக் கொண்டார் தாஜ்நு£ர். அப்புறம் நடந்ததுதான் ஹைலைட். அதன்பின் அந்த ஹாட் டிஸ்க் செயல்படவே இல்லை.

எல்லா புகழும் மட்டுமல்ல, எல்லா டிஸ்க்கும் கூட இறைவனுக்கே!

Rahman’s deep rooted spiritualism to the fore!

We all know that Mozart of Madras AR Rahman is not only inclined towards music but his deep rooted spiritualism is imbibed in his blood. It is also a open fact that he does not exhibit his spiritual affinity, while most others boast of it. Sample this! His spiritual belief could be seen in an incident that had happened during the back ground music score of ‘Dil Se’/Uyire – Manirathnam film.

Rahman has delegated to his assistant Tajnoor, who is composing music now for films, to save the musical notes of the BGM in the hard disc. After a marathon session extended for 5 full days without losing focus the BGM got finally stored in the hard disc. On the D-day when the director Manirathnam, Rahman, Tajnoor and the orchestra – all present in full strength. Tajnoor had to insert the disc and merge it with the film. Despite the efforts of every one and the supposed to be experts of software, the disc could not be opened. Realising that it may lead to trouble, Rahman immediately ordered Tajnoor to take the disc and go with him, and requested the director to stay calm.

Both Rahman and Tajnoor went to straight to a dargah located opposite to the road of Inox multiplex, Triplicane. Both kept the disc at the ‘Samadhi’ of the dargah and prayed for 5 minutes, and returned back to the studio.

Rahman asked Tajnoor to insert the disc and open. What a pleasant surprise, the disc opened to the joy and happiness of everyone present there. The recording completed to everyone’s satisfaction. However, the best part is, soon after the completion of the BGM, the disc took a permanent sojourn and did not open from next time.

Sometimes miracles do happen in one’s life with God’s will!

-ஆர்.எஸ்.அந்தணன்

3 Comments
  1. Ghazali says

    நம்பலாமா கூடாதா என்று தெரியவில்லை. ஆனாலும் நெகிழ்ச்சியான சம்பவம். ரஹ்மானின் பெருந்தன்மைக்கும் தன்னடக்கத்திற்கும்.. அதேபோல் தாஜ்நூரின் விசுவாசத்திற்கும் கிடைத்தஈறைவனின் அருட்கொடை என்று சொல்லலாம்.
    – கஸாலி

  2. Anantharaman says

    God is Great!

    1. M. Prabakar says

      99% people knows god’s power,Its not only with Rahman’s life. Most of our life. We never says these things to others…that’s the point.
      Always he(God) is great.

Reply To Anantharaman
Cancel Reply

Your email address will not be published.

Read previous post:
ஆரம்பம் – விமர்சனம்

‘ஆரம்பமே இனிமேதான்’ என்று இன்டர்வெல்லில் அஜீத் பேசும் ஒரு பவர்ஃபுல் டயலாக்கிற்கான முன் பின் காரணங்கள்தான் இந்த படம். இந்த ‘பலே யோஜனா’ டைரக்டருக்கு ஆம் ஆத்மி,...

Close