ஆவி லிப் கிஸ் அடிக்குமா? பதில் சொல்ல நடிகை வெட்கம்!

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடந்தால் போதும், நாடே பேய் பிடித்து அலையாத குறைதான்! அடுத்தவன் நகத்தை கடித்து துப்புகிற அளவுக்கு டி.வி யை யே பார்த்துக் கொண்டிருப்பார்கள் சிலர். சொந்த நகம் பறி போகுதே என்பது கூட தெரியாமல் அதே டி.வி யில் மூழ்கி கிடப்பார்கள் கடிபட்டவர்கள். இப்படியெல்லாம் ரசிகர்களை மெய் மறக்க வைக்கும் அந்த மேட்சின் கடைசி பாலில் நாலு ரன் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருப்பதாக வைத்துக் கொள்வோம். எப்படியிருக்கும்…! அந்த விறுவிறு நிமிடத்தையே தலைப்பாக வைத்துக் கொண்டு ஒரு படம் வரப்போகிறது தமிழில். ‘1 பந்து 4 ரன் 1 விக்கெட்’ இதுதான் அந்த படத்தின் பெயர்.

‘அந்த மேட்சை பார்த்துக் கொண்டிருக்கும் போதே கதையில் ஒரு திருப்பம் வருகிறது. அதைதான் படம் முழுக்க விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறேன்’ என்றார் அறிமுக இயக்குனர் வீரா. ‘அதென்ன திருப்பம்?’ என்றால், ‘அது ஆவி சம்பந்தப்பட்டதுங்க’ என்றார். (இவிய்ங்களுமா?) ஹீரோயினுக்குள்ளே ஆவி புகுந்துக்குதா? இல்ல ஆவியே கிரிக்கெட் ஆடுதா? இல்ல இந்தியா ஆவி, பாகிஸ்தான் மனுஷனுக்குள்ள புகுந்து அவனை தோற்க வைக்குதா? போன்ற ஆவியையே கலங்க வைக்கும் கேள்விகளை அடுக்கடுக்காக வீசினால் கூட, ‘இல்லங்க… அது சஸ்பென்ஸ்’ என்று சொல்லிக் கொண்டேயிருந்தார் வீரா.

பக்கத்திலிருந்த ஹீரோயின் ஹாசிகா தத், ‘ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு வர்ற மாதிரி இருக்கும்ங்க. போதுமா?’ என்றார். (அட… பொண்ணு நல்லா தமிழ் பேசுதே) ‘படத்துல நீங்கதான் ஆவி போலிருக்கு’ என்றபடியே அவரை நோக்கி போன கேள்விகள், அப்படியே சுற்றி வளைத்து ‘இந்த படத்துல முத்தக்காட்சி இருக்கா?’ என்பதில் வந்து நிற்க, ஏங்க… ‘நான் பெங்களூர்லேர்ந்து தமிழ்சினிமாவே மூச்சுன்னு வந்து சேர்ந்திருக்கேன். இப்பதான் ஒரு நல்ல வாய்ப்பு வந்திருக்கு. இப்பவே லிப் கிஸ்… மவுத் கிஸ்சுன்னு எதையாவது கௌப்பிவிட்டு என்னை பேக்கப் பண்ணிடாதீங்க’ என்றார் ஹாசிகா.

‘இப்பதான் ஆவி சீசன். ஆனால் நாங்க இந்த கதையை உருவாக்கி ரெண்டு வருஷம் ஆச்சு. பீட்சாவுக்கு முன்னாடியே இந்த கதையை உருவாக்கிட்டோம். இருந்தாலும் சொல்றேன். எத்தனை ஆவி கதைதான் வரட்டுமே, நாங்க தனியா நிப்போம்’ என்றார் டைரக்டர் வீரா.

தனியா நிக்கும் போதுதான் பேய் ஆவியெல்லாம் வருமாம். ஜாக்கிரதையா நில்லுங்க!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மறுபடியும் காதல் ட்ரென்டுக்கு நகருமா தமிழ்சினிமா? அமரகாவியம் தரும் ஆறுதல்!

‘வீட்ல பாட்டு வுழுது... சும்மாயில்லாம இவன் செஞ்ச வேலை’ என்று ‘அமரகாவியம்’ படத்தின் டைரக்டரான ஜீவா சங்கரை நோக்கி ஆர்யா கைநீட்ட, பக்கத்திலிருந்த ஆர்யாவின் தம்பி சத்யா...

Close