நான் மெர்சலாயிட்டேன்… 2014 ல் சூப்பர் ஹிட் பாடலாசிரியர் கபிலன்!
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன்சங்கர்ராஜா, ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் கடந்த 2014 ம் வருடத்தில் அதிக ஹிட் பாடல்களை வழங்கியவர் என்ற இடத்தை பிடித்திருக்கிறார் பாடலாசிரியர் கபிலன்.
அதிலும் உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐ படத்தில் கபிலன் எழுதி ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இரண்டு பாடல்கள் 2014 ம் வருடத்தின் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது. நான் மெர்சலாயிட்டேன்… பாடலும், என்னோடு நீயிருந்தால்… பாடலும்தான் அந்த இரண்டும். ஐ படம் உட்பட கபிலன் எழுதிய ஹிட் பாடல்களில் முக்கியமான பாடல்களும் படத்தின் பெயர்களும் பின் வருமாறு-
படம் – மெட்ராஸ்,
இசை – சந்தோஷ் நாராயணன்,
பாடல்கள் – ஆகாயம் தீப்பிச்சா மற்றும்
எங்க ஊரு மெட்ராசு நாங்கதான் அட்ரசு
படம்- அஞ்சான்,
இசை- யுவன் சங்கர் ராஜா ,
பாடல் – காதல் ஆசை யாரை விட்டதோ
படம் – பர்மா,
இசை – சுதர்ஷன் எம் குமார் ,
பாடல் – என் மூச்சும் வேணாம்
படம் – யான் ,
இசை – ஹாரிஸ் ஜெயராஜ்,
பாடல்கள் – நெஞ்சே நெஞ்சே மற்றும்
ஆத்தங்கர ஓரத்துல…
படம் – நிமிர்ந்து நில்,
இசை- ஜி.வி.பிரகாஷ்குமார்,
பாடல் – காதல் நேர்கையில்
படம் – தெகிடி ,
இசை- பிரசன்னா –
பாடல்கள் – விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன் மற்றும்
யார் எழுதியதோ…