2015 வரைக்கும் அனுஷ்காவுக்கு கல்யாணம் இல்லே…

 

அனுஷ்காவின் கல்யாண செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் நாளில், எத்தனை இதயங்கள் வெடித்து சிதறுமோ…? ஆனால் அப்படியொரு செய்தி வராமல் இறுக்கி பிடித்து அத்தனை இதயத்தையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார் அவர். இருந்தாலும் அனுஷ்காவுக்கு வயசாயிருச்சு. அவரது அழகு முகத்தில் ஆங்காங்கே எட்டிப் பார்க்கிறது ஏஜ் என்றெல்லாம் கிசுகிசுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் டோலிவுட்டிலும் கோலிவுட்டிலும்.

இவ்வளவுக்கு பிறகும் அவர் கல்யாணம் செய்து கொள்ளாமல் காலம் கடத்துவது எதற்காக? அவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘ருத்ரம்மாதேவி’ ரிலீசுக்காகவா? என்றெல்லாம் அடி மனசில் இடியை போட்டு உருட்டிக் கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் ஒரு நல்ல செய்தி. 2015 வரைக்கும் அவருக்கு கல்யாணம் இல்லை. எப்படி இவ்வளவு ஆணித்தரமாக சொல்ல முடிகிறது? வேறொன்றுமில்லை, இன்று அனுஷ்கா நடித்துக் கொண்டிருக்கும் ஒரு புதிய படத்தின் செய்தியை வெளியிட்டிருக்கிறது அப்படக்குழு.

மஹதீரா, நான் ஈ போன்ற அல்டிமேட் ஹிட் படங்களை இயக்கிய ராஜமவுலி அடுத்து பிரபாஸ்- அனுஷ்கா நடிக்கும் மஹாபலி என்ற படத்தை இயக்கி வருகிறார். அறுபது நாட்கள்தான் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. அதற்குள்ளாகவே நாடு முழுக்க படம் பற்றிய எதிர்பார்ப்பு கிளறிவிடப்பட்டிருக்கிறது. நவம்பர் 7 ந் தேதி அனுஷ்காவின் பிறந்த நாளாம். அன்றைய தினத்தில் இன்னொரு டீசரையும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார் ராஜமவுலி.

சரி…. அனுஷ்காவின் கல்யாண மேட்டர்? படம் குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அதிகாரபூர்வமான செய்தியில் மஹாபலி 2015 ல் தான் வெளியாகும் என்று கூறப்பட்டிருக்கிறது. அப்ப அதுவரைக்கும் அனுஷ்காவே விரும்பினாலும் தாலி கட்டிக் கொள்ள விட்ருவாங்களா இவங்க?

அகில உலக அனுஷ்கா ரசிகர் மன்றத்தினர் இந்த ஒரு விஷயத்திற்காகவே ஆயிரத்தெட்டு தேங்காய் உடைக்கலாம்.

Anushka’s marriage only in 2015!

Pretty actress Anushka’s marriage seems to happen only in 2015. She would be busy till March-April 2014 with her Rani Rudramadevi to which film she is fully focussed now, straining every nerve. The makers have announced that the First Look of the film will be handed over to her on 7th Nov. as her birthday gift.

She is also playing a major role in Rajamouli’s Bahubali starring Prabhas in the lead. The director has announced that he would be releasing a teaser of the film on her birthday 7th Nov. as birthday gift. Rajamouli had also announced that his film would be ready only in 2015, for release.

In fact both the above 2 films will be a taxing experience for the beautiful actress who shed nearly 15 Kgs, and also trained herself in horse-riding, sword fighting and action oriented fights. With such a long and strenuous outing ahead till 2015, she has declined many a offer to do the lead roles. If that be the case where would she find time to tie the knot and settle in her life in the next year and a half?

Though her parents insist her on her marriage, she may well say yes to tie the knot only in 2015. While we wish her to settle in her personal life, we convey our best wishes on her birthday on 7th Nov. for all success in her endeavours through out her life.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நல்ல கதையா இருந்தா நடிக்கலாம்… அட்லீயிடம் அஜீத் வாக்குறுதி

ராஜா ராணி ஹிட், தமிழ்சினிமாவில் நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் புது ரத்தம் பாய்ச்சியிருக்கிறது. சேட்டை தந்த ஓட்டை சட்டையை கழற்ற முடியாமல் வெட்கத்தோடு சுற்றிக் கொண்டிருந்த ஆர்யாவுக்கு ராஜா...

Close