2015 ல் வேதாளம்தான் டாப் கலெக்ஷன்! 30 பட வசூல் ரிப்போர்ட்!

பின்னே ஏன்யா கார்த்திக் சுப்புராஜை வெறுங்கையோடு அனுப்பி வைக்க மாட்டார்? யெஸ்… அஜீத்தை சந்தித்து கதை சொன்ன கார்த்திக் சுப்புராஜிடம், “இந்த கதையில் நடிப்பதை பற்றி நான் நிறைய யோசிக்கணும்” என்று நாசுக்காக சொல்லியனுப்பிவிட்டார் அஜீத். ஏன் இப்படியொரு பதில்? அவர் நல்ல இயக்குனர்தானே? அவர் படத்தில் அஜீத் நடித்தால், நல்ல பெயர் கிடைக்குமே? என்றெல்லாம் அஜீத் ரசிகர்கள் யோசித்திருக்கலாம்.

கடந்த வருடத்தில் வெளியான அத்தனை படங்களின் கலெக்ஷன் ரிப்போர்ட்டையும் பின்னால் தள்ளிவிட்டு கம்பீரமாக நின்றது அஜீத்தின் வேதாளம் மட்டும்தான். இந்த கலெக்ஷன் ரிப்போர்ட் அஜீத் கைகளுக்கு வந்து சேர, தனது அடுத்த படத்தின் இயக்குனர் யார் என்பதை மிக தெளிவாக ஸ்கெட்ச் போட்டு வைத்துவிட்டார் அவர். அதனால்தான் கார்த்திக் சுப்புராஜுக்கு இப்படியொரு பதில்.

இந்த கலெக்ஷன் விபரத்தை வெளியிட்டிருப்பவர், தமிழ்நாடு திரையரங்கம் தொடர்பான புள்ளி விபரங்களை கடந்த பல்லாண்டுகளாக கணித்து வரும் திரு.ராமானுஜம். அவர் என்ன சொல்லியிருக்கிறார் பார்ப்போமா?

2015ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் வசூல் அடிப்படையில் முதல் 30 இடங்களைப் பெற்ற படங்களின் பட்டியல்….

தமிழ்நாடு தியேட்டர்களில் விற்கப்பட்ட டிக்கட்டுகளின் வசூலின் மூலம் செலவு போக, வினியோகஸ்தர்களுக்கோ அல்லது தயாரிப்பாளர்களுக்கோ கிடைத்த நிகர வருமானத்தின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது…

வேதாளம் – 60 கோடி
ஐ – 45 கோடி
காஞ்சனா 2 – 40 கோடி
பாகுபலி – 38 கோடி
புலி – 29 கோடி
தனி ஒருவன் – 28 கோடி
என்னை அறிந்தால் – 17 கோடி
மாரி – 17 கோடி
கொம்பன் – 16 கோடி
காக்கிச்சட்டை – 15 கோடி
பாபநாசம் – 14 கோடி
தங்கமகன் – 13 கோடி
ரோமியோ ஜீலியட் – 11.50 கோடி
நானும் ரௌடிதான் – 11.50 கோடி
ஆம்பள – 11.50 கோடி
உத்தமவில்லன் – 8.50 கோடி
தரிஷா இல்லனா நயன்தாரா – 8 கோடி
வாலு – 8 கோடி
36 வயதினிலே – 7.50 கோடி
தூங்காவனம் – 7.50 கோடி
ஈட்டி – 7 கோடி
மாயா – 6.50 கோடி
ஓகே கண்மணி – 6.50 கோடி
பாயும்புலி – 6 கோடி
புறம்போக்கு என்கிற பொதுவுடமை – 5 கோடி
டிமாண்டிகாலனி – 4.50 கோடி
சண்டி வீரன் – 2.50 கோடி
டார்லிங் – 3 கோடி
மாசு – 5 கோடி
சகலகலா வல்லவன் – 2.50 கோடி

நன்றி- ராமானுஜம், தமிழ்நாடு என்டர்டெயின்மென்ட்

Read previous post:
உனக்கு 350 எனக்கு 300 கமல் ரஜினி போட்டா போட்டி?

மைசூர் சாண்டல், ஹமாம் சோப்பெல்லாம் போய் இன்னும் சில காலத்தில் எலக்ரானிக் சோப்பு வந்தாலும் வரும் போலிருக்கிறது. டெக்னாலஜியை வளைச்சு கக்கத்துல வச்சுக்கணும் என்கிற ஆசை சமூகத்தின்...

Close