வரப்போகும் எலக்ஷன்! புதிய முடிவில் ரஜினி?
தலைப்பை படித்துவிட்டு, ‘வெள்ளை சுவருக்கு வேலை வந்துருச்சு’ என்று ரசிகர்கள் பெயிண்ட், பிரஷ் சகிதம் கிளம்பினால் அதற்கு ரஜினியே கூட பொறுப்பல்ல! இந்த தேர்தல் தன்னை எந்த பாடு படுத்தும் என்பதை நன்கு உணர்ந்திருக்கும் ரஜினி, அதற்கேற்ப தனது ஷெட்யூல்களை தீர்மானித்துவிட்டார் என்பதுதான் இந்த தலைப்பு நமக்கு தரப்போகும் உள்ளர்த்தம். எலக்ஷன் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நொடியே ரஜினியை சந்தித்து பொன்னாடை போர்த்தி, அதை பிரஸ்சுக்கு கொடுப்பதற்கு ஒரு கூட்டம் கிளம்பும். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, ரஜினியின் தொகுதியில் நின்ற திமுக வேட்பாளர் அவரை சந்தித்து பொன்னாடை போர்த்தி போஸ் கொடுக்க, பின்னாலேயே கிளம்பினார் அதே தொகுதியில் போட்டியிட்ட வளர்மதி.
ரஜினி அந்த அப்பாயின்ட்மென்ட்டுக்கு ‘நோ’ சொல்லி விட்டார். ‘நானும் உங்க தொகுதி வேட்பாளர்தானே?, திமுக வேட்பாளருக்கு போட்ட மாதிரி எனக்கு பொன்னாடை போர்த்தலாமே?’ என்று பொதுவெளியில் வந்து பேட்டியளிக்கிற அளவுக்கு போனது நிலைமை. ரஜினியின் கால்குலேஷனில் சிறு மிஸ்டேக். வளர்மதியே தேர்தலில் வென்று எம்.எல்.ஏ ஆகி பின் மந்திரியும் ஆனார். மீண்டும் அதுபோன்ற சங்கடங்கள் இந்த முறை நிகழக் கூடாது என்று நினைக்கிறாராம் ரஜினி. அதனால்?
நேற்று பொங்கல் தினத்தன்றும் கபாலி ஷுட்டிங்கை வைத்தார்கள். விடுமுறையில்லாமல் தொழிலாளர்கள் வந்து பணியாற்றினார்கள். இன்று மாட்டுப் பொங்கலன்றும் ஷுட்டிங் நடைபெறுகிறது. இன்றோடு படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அமெரிக்கா பறக்கும் ரஜினி, மீண்டும் பிப்ரவரி 1 ந் தேதி மலேசியாவில் நடைபெறும் கபாலி ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறாராம். சுமார் 15 நாட்கள் அங்கு படப்பிடிப்பு. அப்படியே அங்கிருந்தபடியே மீண்டும் அமெரிக்காவுக்கு பறக்கும் ரஜினி, ஓட்டு போடுவதற்காகதான் சென்னைக்கு வருவார் என்கிறது அவரது டைட் ஷெட்யூல்!
தேர்தல் புலிகள் மெனக்கெட்டு அமெரிக்கா போய், அங்கிருந்து ரஜினியுடன் போட்டோ எடுத்து அனுப்பினால், அதை எப்படி தடுப்பாரோ? பெரும் பலம் கொண்ட ரசிகர்கள் இருந்தால், இப்படியெல்லாம் விரட்டிட்டு வந்துதான் வெத்தல பாக்கு வைப்பாங்க! என்னதான் பண்ணுவாரு அவரும்?
VAZGA TAMIL GOD SUPER STAR RAJINI