21 ந் தேதி முதல்வர் கலந்து கொள்ளும் விழாவில் விஜய்க்கு இடம் உண்டா?

இந்திய சினிமாவின் நுற்றாண்டு விழா சென்னையில் கொண்டாடப்பட இருக்கிறது. வருகிற 21 ந் தேதி நடைபெறும் இந்த விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். சென்னையே விழாக் கோலம் பூண இருக்கும் இந்த நேரத்தில், அம்மா ‘டிக்’ அடிக்கிற நடிகர்களை மட்டுமே மேடையில் ஏற்றப் போகிறார்களாம். இந்த ஒரு விஷயத்துக்காகவே பல ஹீரோக்களின் மனசுக்குள் ஒரே டிக் டிக் டிக் அல்லது திக் திக் திக் சவுண்ட்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், பொற்கிழியும் கொடுத்து கவுரவிக்க முதல்வர் வந்திருந்தார். நேரு ஸ்டேடியத்தில் நடந்த இந்த விழாவில் முதல்வரால் டிக் செய்யப்பட்டவர்கள் மட்டுமே மேடையில் ஏற்றப்பட்டனர். ரஜினி, கமல், இருவரை தவிர முன்னணி ஹீரோக்கள் யாருக்கும் இடம் தரப்படவில்லை. இந்த முறையும் அப்படியேதான் நடக்கும் போலிருக்கிறது. ஆனால் நம்மையும் மேடையில் ஏற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்களாம் அஜீத்தும் விஜய்யும். கூடவே அம்மாவின் செல்லப்பிள்ளைகளில் ஒருவர் என்று அண்மைக்காலமாக கொண்டாடப்படும் சூர்யாவும். ஆனால் இவர்களுக்கெல்லாம் இடம் இருக்குமா என்பதை சொல்லமுடியாத சூழலில் இருக்கிறார்களாம் விழாக்குழுவினர்.

மற்றவர்களுக்கு எப்படியோ? விஜய் மேடையில் ஏற்றப்பட மாட்டார் என்றும் கூறுகிறார்கள். காரணம், தலைவா பிரச்சனை ஏற்பட்டபோது கொடநாட்டுக்கு போய் முதல்வரை சந்திக்க முடியாமல் திரும்பினார்கள் விஜய்யும் அவரது அப்பாவும். அதற்கப்புறம் சென்னை வந்த முதல்வரை சந்திக்க போயஸ் கார்டனுக்கு போயிருந்தார்களாம். இந்த முறை விஜய்யை காரில் உட்கார வைத்துவிட்டு எஸ்.ஏ.சி மட்டும் கார்டனுக்குள் போனார். நான் அழைக்கும் போது உள்ளே வந்தால் போதும் என்று விஜய்யிடம் கூறிவிட்டுதான் உள்ளே சென்றாராம் அவர். ஆனால் அவர் போய் பல மணி நேரமாகியும் வெளியே வரவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த விஜய் உள்ளே நுழைய முற்பட, யார் நீங்க? அப்பாயின்ட்மென்ட் இருக்கா என்றெல்லாம் செக்யூரிடி அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டாராம் அவர்.

அதற்கப்புறமும் இருவரையும் பார்க்காமல் திருப்பி அனுப்பினாராம் முதல்வர் ஜெயலலிதா. இந்த சம்பவத்தால் மிகவும் வருத்தமுற்ற விஜய், இந்த விழாவில் கலந்து கொள்ள வருவாரா? வந்தாலும் அவருக்கு உரிய மரியாதை அங்கே கிடைக்குமா? 21 ந் தேதி வரை பொறுத்திருந்தால் விடை தெரியும்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சதி பண்ணிட்டாங்க… தயாரிப்பாளர் தாணு கோபம்!

ஒண்ணு மண்ணா இருந்தாலும் தோற்ற பிறகு நட்பாவது, நலமாவது? நேற்று காலையில் தயாரிப்பாளர் தாணு பிரஸ்சை மீட் பண்ணிய போது இதுவரை அவரை இயக்கி வந்த எஸ்.ஏ.சி...

Close