அதுவே நிஜமாகட்டும்….

ஹிட் கொடுக்கிற காம்பினேஷன்களை காலம் பிரித்து தனித்தனியாக எறிந்துவிடுவதுண்டு. சேர்ந்திருக்கும்போது இவர்கள் கொடுக்கிற ஹிட் பிரியும்போது அமைவதில்லை. கோடம்பாக்கத்தில் இப்படி ஜோடி போட்டு ஹிட்டடித்த டெக்னீஷியன்களை பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம். பிரிந்து பிளாப் ஆனவர்களையும் அதே மாதிரி பெரிய பட்டியலில் சேர்க்கலாம். நாம் சொல்லப் போகும் இந்த இருவர் எந்த ரகம் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஆனால், இவர்களின் சேர்க்கை தமிழ்சினிமாவுக்கே ஒரு மகரந்த சேர்கையாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். சரி, அந்த ஜோடி யார்? கவுதம் மேனனும் ஹாரிஸ் ஜெயராஜும்தான். இருவரும் சேர்ந்து கொடுத்த மியூசிக் ஹிட்டுகளை இப்போதும் ஒருவித ஏக்கத்தோடு ரசித்து வருகிறார்கள் இசை ப்ரியர்கள். மீண்டும் இணைய மாட்டார்களா என்கிற இவர்களின் ஆதங்கத்தை புரிந்து கொண்டது போல, அண்மையில் சந்தித்து மனம் விட்டு பேசினார்களாம் இருவரும். எனவே விரைவில் கவுதம் இயக்கும் படத்திற்கு ஹாரிஸ் இசையமைக்கக் கூடும் என்று கிசுகிசுப்பு கேட்கிறது இங்கே. அதுவே நிஜமாகட்டும்….

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘அவரும்’ வந்திருந்தாரா? அது தெரிஞ்சா நல்லாயிருக்கும்.

ஐயோ பாவம் ஹன்சிகா. எந்நேரமும் சிரித்த முகத்தோடு வலம் வந்த அவரை அழ வைத்துவிட்டார் அவரது பாட்டி. இந்த பேத்தி செல்லத்தை பெரும்பாலான நேரங்களில் மிஸ் பண்ணி...

Close