22 ந் தேதி வரணும்… சிம்பு அழைப்புக்கு செவிசாய்த்த ஹன்சிகா

போசாம ’வாலு’ என்பதற்கு பதிலாக ‘அனுமார் வாலு’ என்று வைத்திருக்கலாமே என்று அப்படத்தின் தயாரிப்பாளரே தடுமாறுகிற அளவுக்கு ஷுட்டிங்கை இழுத்தடித்துக் கொண்டேயிருந்த சிம்பு, சமீபகாலமாக வாலு மீது தன் கருணை பார்வையை திருப்பியிருக்கிறார். ஒருபுறம் லவ் ஆந்த்தம் வேலைகள், மறுபுறம் பாண்டிராஜ் இயக்குகிற படம், நடு நடுவே திண்ணை கச்சேரி போல வரும் பாட்டு பாடுகிற வாய்ப்பு என்று எந்நேரமும் பிஸியாகவே இருக்கிறார் சிம்பு.

இந்த பரபரப்பில் அவர் மறந்தே போன ரெண்டு விஷயங்களில் ஒன்று வாலு. இன்னொன்று வேட்டை மன்னன். கடந்த சில வாரங்களுக்கு முன் வாலு ஷுட்டிங்கை வைத்துக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளரிடம் கூறியிருந்தாராம். ஆனால் கடைசிநேரத்தில் நயன்தாராவின் சென்னை வருகை சிம்புவை திசை மாற வைத்துவிட்டது. கொஞ்சம் தள்ளிப் போடுங்க. நான் போகலேன்னா நயன்தாரா கால்ஷீட் வேஸ்ட் ஆகிடும் என்று கூறிவிட்டு இங்கே வந்துவிட்டாராம்.

தற்போது மீண்டும் 22 ந் தேதியிலிருந்து வாலு படப்பிடிப்புக்கு பச்சை கொடி காட்டியிருக்கிறாராம். படத்தின் நாயகியான ஹன்சிகாவிடம், 22 ந் தேதி ஷுட்டிங் இருக்கு, வரணுமே என்று இவர் இழுக்க…. கூப்பிட்டது சிம்புவாச்சே என்று தனது பிற பட கால்ஷீட்டுகளில் பெருத்த அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு உத்தரவிட்டிருக்கிறாராம் ஹன்சிகா.

என்னதான் இருந்தாலும் நெஞ்சோரத்துல ஈரம் இருக்கதான் செய்யுது…

Vaalu shooting is to resume from 22nd Jan. Audio launch on 14th Feb.

Simbu starrer Vaalu produced by NIC Arts Chakravarthy and directed by Debutant Vijay Chandar is all set to resume shooting from 22nd Jan. It is learnt that Simbu has given adequate dates for the shoot, despite doing two other films – Pandiaraj’s film and Gautham Menon’s film. Besides he is also busy with his album and crooning songs for his friends, for their films.

It is said that he made a request to Hansika, his ‘sweet-heart’ to adjust her dates for the Vaalu shoot. She had obligingly done the same as has been confirmed to the unit. So in all likelihood Vaalu’s shooting would begin from 22nd Jan.

Meantime, the makers are planning to release the audio of the film on Feb.14th. Music composer Thaman has revealed that he has been requested to rush through the music mix so that the album will be released on Valentine’s Day, Simbu’s one of the favourite day.

According to some media reports the makers and Simbu are planning to release the film 1st May (another favourite day – his mentor Ajith’s birthday). An official announcement is awaited.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கோடம்பாக்கத்தில் சின்னாபின்னப்படும் ஆம் ஆத்மி

கோடம்பாக்கத்தில் சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருக்கிறது ஆம் ஆத்மி. டெல்லியை பிடித்தாலும் பிடித்தார்கள். தமிழ்நாட்டை நாங்க புடிச்சி தர்றோம் என்று மார்தட்டிக் கொண்டு கிளம்பியிருக்கிறது ஒரு கோஷ்டி. ஆம் ஆத்மி...

Close