239 பேருடன் மலேசிய விமானம் மாயம்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி மலேசிய அரசுக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் இன்று அதிகாலை புறப்பட்டது. காலை 6.30 மணியளவில் பீஜிங் சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த விமானம் புறப்பட்டு சென்ற சுமார் 2 மணி நேரத்துக்குள் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது.

இதனால் பதற்றமடைந்த கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அந்த விமானம் தொடர்பு எல்லைக்குள் இருந்து மாயமாகி விட்டதாக அறிவித்துள்ளனர். அந்த விமானத்தில் 2 குழந்தைகள் உள்பட 227 பயணிகள், 12 பணியாளர்கள் என மொத்தம் 239 பேர் இருந்ததாக மலேசியன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

மலேசியா- வியட்நாம்- சீனாவுக்கு இடைபட்ட வான் எல்லை வழியாக காணாமல் போன விமானத்தை தேடும் நடவடிக்கை முழு வேகத்தில் நடந்து வருவதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பாலுமகேந்திராவின் பிள்ளைகள்… -தேனி கண்ணன்

அப்போது ராமாவரத்தில் ஒரு வீட்டில் மவுனிகாவோடு தங்கியிருந்தார் பாலுமகேந்திரா. அவர் என்னை பார்க்க விரும்புவதாக மவுனிகா எனக்கு போனில் தெரிவித்திருந்தார் மவுனிகா. காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருந்தேன்....

Close