ரொம்ப நல்ல கம்பெனி… அது மேல பழி போடறதா? விஜய் பட வில்லங்கம் குறித்து கோடம்பாக்க ‘ டாக்கு! ’

சமீபத்தில் டைரக்டர் சிம்புதேவனுக்கு முன்னணி நாளிதழ் நிருபர் ஒருவர் போன் அடித்தார். ட்ரிங்… ட்ரிங்… ட்ரிங்ஸ் க்கு பிறகு எதிர்முனையில் சிம்புதேவன் யெஸ் சொல்ல, நான் இன்னாரு பேசுறேன் என்றுதான் துவங்கினார் நிருபர். அதற்கப்புறம் அங்கிருந்து வந்ததெல்லாம் ஒரே தாட்பூட்! உங்க இஷ்டத்துக்கெல்லாம் என் லைனுக்கு வரப்படாது. நான் எவ்வளவு பெரிய டைரக்டர்? யாரை வச்சு படம் பண்றேன்னு தெரியும்ல? முதல்ல என்னோட உதவி இயக்குனர்ட்ட போன் பண்ணி அப்பாயின்ட்மென்ட் வாங்கிட்டு பேசுங்க. கட்….!

இந்தாளு இவ்ளோ நேரம் பேசுனதுக்கு, உருப்படியா என்ன சார் விஷயம்னு கேட்டிருக்கலாமே? இது இந்த முனையிலிருந்த நிருபர். சரி விஷயத்துக்கு வருவோம். புலி பட இயக்குனர் சிம்புதேவன் இப்போதெல்லாம் காலில் மட்டுமல்ல, வாயிலும் வெந்நீரை ஊற்றிக் கொண்டுதான் பேசுகிறாராம். ‘இந்த அவசர புத்திதான் டிசைனர் விஷயத்திலும் நடந்திருக்கணும். இல்லேன்னா சுத்த பத்தமா இருக்கிற ஒரு கம்பெனி மேல எதுக்கு சேறு வாரி வீசணும்?’ என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

24AM என்ற சினிமா டிசைனிங் நிறுவனத்தின் மீதுதான் புலி பட முதலாளி, தொழிலாளிமார்கள் கம்ப்ளைண்ட் சொல்கிறார்கள். இந்நிறுவனத்தின் முதலாளி ட்யூனிஜான் என்பவரிடம் ஹாட்டி டிஸ்க் கொடுக்கப்பட்டதாகவும், பின்பு அங்கிருந்து வேறொரு நிறுவனத்திற்கு டிசைன்ஸ் மாற்றப்பட்டதால், அவர் முன்பு வாங்கிய டிஸ்கிலிருந்து ஸ்டில்களை ரிலீஸ் செய்கிறார் என்பதும் குற்றச்சாட்டு. சற்றே திரும்பி கோடம்பாக்கத்தின் முன்னணி சினிமா நிறுவனங்களிடம் மைக்கை நீட்டினால், அடக்கடவுளே… ஆகிறார்கள்.

தமிழ்சினிமாவில் தற்போது இருக்கும் முன்னணி பட நிறுவனங்கள் அத்தனையும் ட்யூனி ஜானிடம்தான் டிசைனுக்கு நிற்கிறார்கள். பெரிய பெரிய படங்களுக்கு டிசைன் செய்யும் அவர், ஒருமுறை கூட இப்படி நடந்து கொண்டதில்லை. அவரை பற்றி எங்களுக்கு நல்லா தெரியும். அப்படி செய்யக் கூடியவர் அவரல்ல என்கிறது இவர்கள் தரும் காண்டாக்ட் சர்டிபிகேட். உண்மை இப்படியிருக்க, வெந்நீர் வாய் சிம்புதேவன் வேகாத முட்டையை அவிக்கிறாரோ என்றுதான் தோன்றுகிறது.

எதுக்கும் ஒருமுறைக்கு நாலு முறை யோசிச்சுட்டு பழி போடுங்க ப்ரதர்ஸ்…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஆர்யாவுக்கு த்ரிஷா வச்ச செல்லப் பெயர்! அத வெளியில சொல்றதுக்கே கூச்சமா இருக்கே?

செல்லக்குட்டி, வெல்லக்கட்டி, ஜித்து, பித்து என்று ஒவ்வொருவரும் தனக்கு பிடித்தமானவர்களை ஏதோவொரு பெயரில் அழைத்து, நாக்கிலேயே ‘நைஸ்’ பண்ணி வருகிறார்கள். நிஜப் பெயரைவிட இந்த நிக் நேம்,...

Close