அரை மணி நேர படம் கட்! லிங்கா விஷயத்தில் கே.எஸ்.ரவிகுமார் முடிவு

வெகு நீளமான படங்களின் அதோ கதி என்பதுதான் கடந்த கால எச்சரிக்கை. ஆனாலும் தங்கள் படத்தின் நீளத்தை எங்கும் குறைக்க முடியாது என்று மல்லுக்கு நிற்கும் இயக்குனர்களால் மன நிம்மதி குலைவார்கள் ரசிகர்கள்! சமீபத்தில் வந்த ‘அஞ்சான்’ கூட கிட்டதட்ட மூன்று மணி நேரம் ஓடிய படம். ஏற்கனவே படம் கொட்டாவி. இதுல நீளம்ங்கிற மயக்க மருந்தும் அடிச்சுத் தள்றாங்களே என்று ரசிகர்கள் வேதனைப்பட்டு தியேட்டரிலேயே துண்டை விரித்து துங்கிய கதையெல்லாம் நடந்தது.

நல்லவேளை… லிங்கா திரைப்படம் நீளம் என்றாலும், ரஜினியின் சுறுசுறுப்புக்காகவும், அசத்தல் ஸ்டைலுக்காகவும் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் ரசிகர்களின் நலன் கருதி படத்தை அரை மணி நேரம் குறைத்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் கே.எஸ்.ரவிகுமார். ஆரம்ப காட்சிகளில் சிலவற்றையும் பிளாஷ்பேக் காட்சிகள் சிலவற்றையும் நீக்கும் எண்ணம் இருக்கிறது அவருக்கு. உடனடியாக அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது.

அநேகமாக இன்று பிற்பகலில் இருந்தே நீளம் குறைக்கப்பட்ட லிங்காவை தியேட்டரில் கண்டு களிக்கலாம் ரசிகர்கள்.

2 Comments
  1. M.MARIAPPAN says

    கிளைமாக்ஸ் காட்சி ஒன்னும் பெரிய மேட்டரே இல்லை . ஜாக்கி ஜான் செய்தால் மட்டும் கை தட்டி ரசிக்கிறார்கள்,தலைவர் 65 வயதிலும் பழைய ஸ்டைலில் பைக்கில் வருகிற அழகே தனி . படத்தில் ரசிக்க கூடிய visayam எவ்வளோவோ உள்ளது . so டோன்ட் ஒரி be ஹாப்பி . endrum தலைவரின் வெறியன் .

  2. Giridharan says

    லிங்கா – பொழுதாற்றும் நோக்கில் தாராளமாகப் பார்க்கலாம்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அப்ப சொர்ணமால்யா இப்ப ரம்யா…! மணிரத்னம் முடிவு

‘யாரோ யாரோடி உன்னோட புருஷன்.... யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்’ என்று சின்னத்திரை சொர்ணமால்யாவை வியந்து திரைக்கு கூட்டி வந்தவர் மணிரத்னம். ‘அலைபாயுதே’ படத்தின் சொர்ணமால்யாவின்...

Close