வித்தைகாட்டியாவது பொழச்சிப்பான் இந்த மன்சூரு…

அடுத்தடுத்த விழாக்களில் ‘வித்தைகாட்டியாவது பொழச்சிப்பான் இந்த மன்சூரு…’ என்று மன்சூரலிகான் பஞ்ச் டயலாக் பேசினால் யாரும் சிரித்துவிட முடியாது. ஏனென்றால் மன்சூரலிகானின் அதிரடி என்ற படத்தின் துவக்க விழாவில் அவர் காட்டிய வீர தீர சாகசங்கள் படு அசத்தலாக இருந்தது.

தமிழ்சினிமாவில் சென்ட்டிமென்ட் என்பது அப்போது மட்டுமல்ல, எப்போதுமே கொடி கட்டி பறக்கிற கோமாளித்தனம். அதை சீண்டிய ஆண்மகன் என்றால் அவர் மன்சூர்தான். வீட்டை விட்டு கிளம்பும்போது பூனை குறுக்கே ஓடினால் உள்ளே திரும்பி ஓடுவது பலரது வழக்கம். ஆனால் கோடி கோடியாய் பணத்தை போட்டு படம் எடுத்த மன்சூர், சுமார் ஐம்பது பூனைகளை குறுக்கே விட்டு படத்தை துவங்கியதெல்லாம் பெரியார் திடல் கூடி நின்று பாராட்டுவிழா எடுக்க வேண்டிய சமாச்சாரம். (ஆனால் அவர்கள் அதையெல்லாம் செய்யவேயில்லை, மாறாக அதே பெரியார் திடலை ஏசுவின் ஜெபக் கூட்டத்திற்கு வாடகைக்கு விட்டு துட்டு பார்த்தார் வீரமணி) அது போகட்டும்… மீண்டும் மன்சூர் மேட்டருக்கு வருவோம்.

அதிரடி படத்துவக்கவிழாவில் மன்சூர் செய்த சாகசங்கள் நிஜமாகவே மெய் சிலிர்க்க வைப்பவை. 120 கிலோ எடையுள்ள ஒருவரை வயிற்றின் மீது உட்கார வைத்து உடற்பயிற்சி செய்தார் மன்சூர். ஐம்பது முட்டைகளை ஒரே நேரத்தில் விழுங்கினார். 20 பீர் பாட்டில்களை வெறுங்கையால் உடைத்து தள்ளினார். எரியும் தீ நாக்குகளுக்கு நடுவில் இருந்த செங்கற்களை உடைத்தார். இப்படி அவர் செய்யும்போது அவரது தலையில் தீப்பிடிக்க, ஒரு கோணிப்பையை போட்டு ஒரே அமுக்காக அமுக்கினார்கள் தீயை.

இவ்வளவு ஆர்ப்பாட்டத்தையும் படத்தின் ஸ்கீரின் ப்ளேயில் காட்டினால் படமும் ஓடும். உங்களுக்கும் பேரு. செய்வீங்களா மன்சூரு? கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை தயாரிப்பு நடிப்பு இயக்கம் என்று ஊரு பட்ட வேலைகளையும் ஒண்டியா செய்யப் போகும் மன்சூருக்கு வாழ்த்துக்கள்….

Mansoor Ali Khan launches his film Athiradi

Mansoor Ali Khan who bad a brief break has come out with new vigour now. He organised an event to launch his next film Athiradi. He is said to have trained a lot with his fitness and amazing stunts, including breaking of breaks lit with fire. He has made sure to provide thrilling stunt sequences in his film. He practised some exercises keeping a person weighing about 120 Kg. on his stomach, to keep his body fit for the film. The focus he is showing on these matters no doubt is welcome. But if he shows the same in making the film, it will make him much more popular besides making him financially sound. For Athiradi he has taken the burden of story, screen play, dialogues, direction, music and production apart from acting in the film.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வெண்டைக்காயில விதை இல்ல… கத்திரிக்காயுல காம்பு இல்ல… அந்த கதையெல்லாம் சத்யராஜ்கிட்ட இல்ல…!

வெண்டைக்காயில விதை இல்லேன்னா கோவிச்சுக்கிறது, கத்திரிக்காயில காம்பு இல்லேன்னா சண்டை போட்டுட்டு ஷுட்டிங் வராம போறது... இப்படி சாதாரண ஹீரோக்களே ஷுட்டிங் சாப்பாட்டு மெனுவை கிழித்துப் போடுகிற...

Close