36 வயதினிலே! ஜோதிகா ரீ ஷுட்டிங்?
ஜோதிகாவின் ரீ என்ட்ரியை கொண்டாடுகிற விதத்தில் அமைந்ததுதான் அந்த பாடல்! சந்தோஷ் நாராயணன் இசையில் ‘36 வயதினிலே’ படத்தில் வரும் ‘வாடி ராசாத்தி’ பாடல், இப்போது பட்டிதொட்டியெல்லாம் பம்பர் ஹிட்!
ஒரு பாடல் படம் வெளிவருவதற்கு முன்பே இவ்வளவு ஹிட்டானால், படக்குழுவினருக்கு என்ன தோன்றுமோ, அதுதான் இவர்களுக்கும் தோன்றியிருக்கிறது. அதுவரைக்கும் அந்த பாடல் வெறும் ஆடியோவில் மட்டும்தான் இருந்தது. படத்தில் இல்லையாம். ரசிகர்கள் ஏமாந்துவிடுவார்களே… என்ன செய்வது? முடிந்து போன படத்திற்காக மீண்டும் ஜோதிகாவிடம் கால்ஷீட் கேட்டார்களாம்.
தாராளமாக கொடுத்தாராம் அவரும். உடனடியாக சென்னையில் செட் போட்டு அந்த பாடலை படமாக்கிவிட்டார்கள். அதற்கப்புறம்தான் அந்த யோசனை. இந்த முழு பாடலையும் படம் வெளியாவதற்கு முன்பே தொலைக்காட்சி பிரமோஷனுக்காக பயன்படுத்தினால் என்ன? மளமளவென அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. விரைவில் அந்த பாடலை யு ட்யூப், டி.வி சேனல்கள், இணையதளங்களில் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
படத்தில் டைட்டிலில் மட்டும் அந்த பாடலை பயன்படுத்தப் போகிறார்களாம்.