3D படத்தில் நடிக்கிறார் சூர்யா… – இது லிங்குசாமியின் விருந்து!

இரண்டு ஸ்டேஷன்களுக்கு நடுவில் முள்ளை வைத்துக் கொண்டு ரேடியோ கேட்பது மாதிரி, மூளை கிறுக்கேறி போகும் போலிருக்கிறது சூர்யா ரசிகர்களுக்கு. ஒரு சேனல் லிங்குசாமி, இன்னொரு சேனல் கவுதம் மேனன். யாருக்கு முதலில் சூர்யா? இந்த கேள்வி ரசிகனை பிடித்தாட்டினாலும் அவர் எப்போதுமே கூல்! முதலில் லிங்கு என்று கூறியிருக்கிறாராம்.

ஏனிந்த இரட்டைக்குதிரை பாய்ச்சல்?

விஷயம் இல்லாமலா? லிங்குவுடன் இவர் இணையும் படத்தை 3டி முறையில் எடுக்கலாமா என்று யோசித்து, அந்த யோசனைக்கு ‘டிக்’ மார்க்கும் போட்டுவிட்டார் சூர்யா. பொதுவாக ஒரு 3டி படத்தை எடுக்க இரண்டு வருடங்கள் ஆகலாம். தனது ரசிகர்களை இரண்டு வருடம் பட்டினி போட சூர்யா தயாராக இல்லை. எனவே லிங்குசாமி பட வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, கவுதம் மேனனை தட்டிவிடுவார் என்கிறார்கள். முதலில் ஆரம்பிக்கப்படுவது லிங்குவின் படமாக இருந்தாலும் திரைக்கு வரப்போவது கவுதமுடையதாக இருக்குமாம்.

லிங்குவின் படம் 3டி யில் துவங்கப்படுகிறது என்பதை அறிந்தவுடன் தலைதெறிக்க ஓடியது ஒளிப்பதிவாளர்கள்தான். இந்த புராஜக்ட் முடிவதற்குள் இருக்கிற தலைமுடி எக்கச்சக்க லாஸ் ஆகிவிடும் என்பதால்தான் இந்த ஒட்டம். அதுமட்டுமல்ல, படத்தை முடிக்க ஆகிற காலத்தில் இரண்டு மூன்று படங்களை ஒளிப்பதிவு செய்துவிடலாமே? அதனாலும்தான்.

யார் யாரிடமோ பேசி, எல்லாம் பெயிலியர் ஆனபின் கடைசியாக வந்து சேர்ந்திருக்கிறார் சந்தோஷ் சிவன். எல்லாமே அந்த சிவனின் அருளால் சந்தோஷமாக நிறைவேறட்டும்…

Lingusamy’s 3D venture with Suriya does it for Santosh Sivan

While Suriya’s fans are confused and worried as to which film Suriya would take first – Lingusamy or Gautham Menon. Suriya struck a brilliant idea it appears, as Lingusamy’s film will not be made in 3D version as Suriya has given his consent. Which means, producer-director Lingusamy has to at least wait for another 2 years before his film hit the screens. Which means, Camera person who will handle the camera for Lingusamy’s film could not work for another two years in any other film thereby losing income. Which means, camera persons were hard to find by for the project and with great difficulty Santish Sivan was roped in. Which also means that Suriya in the mean time, work on Gautham Project and complete it and get it released. Which means though Suriya starts his next project with Lingusamy, first, his project with Gautham Menon would hit the screens first.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வைரமுத்துக்கு பிறகு இளையராஜாவாம்… – மனுநீதி தவறிய மதன் கார்க்கியின் பேனா!

ஒரு தியேட்டரில் நடைபெறும் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்படும் படம்தான் கனவுக்கொட்டகை! அர்சில் மூர்த்தி இயக்கும் இப்படத்திற்கு இசை ரகுநந்தன். தலைப்பே இப்படி அமைந்துவிட்ட பிறகு படத்தில்...

Close