ஆவி, பிசாசு, பேய், பில்லி சூனியம் வாட் நெக்ஸ்ட்?

பழிவாங்குகிற விஷயத்தில் ஆவிகளுக்கு இணையாக ஆளுங்கட்சிகள் கூட இருக்க முடியாது. அது போல சாமியார்களில் எத்தனை வகையோ தெரியாது. ஆனால் ஆவிகளில், பேய்களில் எத்தனை வகை என்பதை இன்னும் சில காலங்களுக்குள் முழுமையாக புரிய வைத்துவிடுவார்கள் நம்ம சினிமாக்காரர்கள். கோடம்பாக்கத்தில் நெக்ஸ்ட் ஆவி படம், ‘மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை! ’

இதுபோன்ற படங்கள் வருவதில் ஒரு சவுரியம்… நாலு பேர் இருந்தாலும் ஒரு படத்தை ஓட்டும் தியேட்டர்காரர்கள், அட்லீஸ்ட் நாற்பது பேர் இல்லாமல் இதுபோன்ற படங்களை ஓட்ட மாட்டார்கள். உள்ளேயிருக்கிற நாலு பேரும் பீதியால் பேதியானால் அதற்கு யார் பொறுப்பாவது என்கிற அச்சத்தால் ஏற்படுவதுதான் அந்த மாற்றம். போகட்டும்… இந்த ‘மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை! ’ படத்தின் ஸ்பெஷல் என்ன?

மலையாள ஸ்டார் மம்முட்டியின் சகோதரி மகன் அஷார்தான் இப்படத்தின் ஹீரோ. இவரை இரண்டு யுவதிகள் காதலிக்கிறார்கள். அதில் ஒருவர் சுமார் மூஞ்சு குமாரி. மற்றொருவர் பேரழகி. வழக்கம் போல அழகுக்கு தலை வணங்குகிறார் ஹீரோ. சுமார் மூஞ்சி குமாரி, தற்கொலை செய்து கொள்கிறார். அதற்கப்புறம் காதல் ஜோடிகளை அவர் என்ன பண்ணுகிறார் என்பது க்ளைமாக்ஸ். கை நிறைய ரத்தத்தால் முகம் கழுவுகிற காட்சி ஒன்றும் வருகிறது படத்தில். அதுபோல இன்னும் பல திகில் காட்சிகளுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் படம், பேயரைந்த மாதிரி ஒரு வசூலை கொடுக்கும் போலதான் இருக்கிறது. ஏன்?

பொதுவாகவே கேரளாவில் பேய் பிசாசு பில்லி சூனியம் கைவந்த கலை. இதுபோன்ற சப்ஜெக்டுகளை அவர்கள் கையாளும் போது அதில் ஸ்ருதி சுத்தம் இருக்குமல்லவா? ‘இந்த படம் வெற்றி பெற்றால் இனி எடுக்கும் படங்கள் எல்லாமே தமிழில்தான்’ என்றார் ‘மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை! ’ படத்தின் தயாரிப்பாளர் ஷீலா குரியன்.

பயமுறுத்தனும்னு முடிவு செஞ்ச பின்னாடி லாங்குவேஜாவது ஒண்ணாவது? எல்லா மொழியிலேயும் எடுங்க. எங்க ஊர்ல டப் பண்ணிக்கிறோம்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சூர்யாவானார் சிம்பு

சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதை, இனி ‘சித்தன் போக்கு, சிம்பு போக்கு’ என்று கூட மாற்றலாம். கடந்த சில தினங்களுக்கு முன் மிச்ச சொச்சமிருக்கும் ‘இது...

Close