மைக்குலதான் பாப்பா… படத்துல டாப்போ டாப்புப்பா! ஒரு ஹீரோயினின் வெட்கம்!

ஒரு படத்திற்கு தலைப்பு வைப்பதில் துவங்குகிறது அப்படம் குறித்த க்ளைடாஸ்கோப்! என்னவாக இருக்கும் என்று எதிராளியை உசுப்பிவிட்டால் போதும், அப்படம் ஹிட்! அப்படிதான் இருக்கிறது ‘8 mm’ என்ற தலைப்பும். மலேசியா ஜெயராதா கிருஷ்ணன் தயாரிக்கும் இப்படத்தை இயக்கியிருக்கிறார் அமீன். ‘என்னங்க இப்படியொரு தலைப்பு? அது குறிப்பது துப்பாக்கி ரவையையா, கேமிரா லென்சையா?’ என்றெல்லாம் அவரை துளைத்து எடுத்தால், ‘ரெண்டுமே இல்ல. அதுதான் சஸ்பென்ஸ்’ என்கிறார்.

கடந்த சில வாரங்களாகவே மலேசிய தமிழர்களை கோடம்பாக்கத்தில் காண முடிகிறது. கலையும் கச்சிதமும் பிளைட் ஏறி கோடம்பாக்கம் வந்தால் இங்கிருப்பவர்களுக்கும் நல்லது. அங்கிருப்பவர்களுக்கும் நல்லதுதானே? அதனால் வரவேற்போம். ‘8 mm’ படத்தில் ஹீரோவாக நடிக்கிற நிர்மல் ஒரு பல் மருத்துவர்.

தயாரிப்பாளரின் பல்லை பிடுங்கி பதம் பார்க்கிற ஹீரோக்களுக்கு மத்தியில், இந்த நிஜ பல் டாக்டர் அவ்வளவு ஒத்துழைப்பு கொடுத்தாராம் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும். இந்த படம் துவங்கி முடியுற வரைக்கும் பிராக்டீஸ் ரெகுலரா இல்ல. ஆனால் படத்தில் நடிச்சது அவ்வளவு த்ரில்லிங்கா இருந்திச்சு. பொதுவா புது ஹீரோக்களுக்கு டைரக்டர்கள் கதை சொல்ல மாட்டாங்க. ஆனால் அமீன் சார் எனக்கு முழு கதையும் சொன்னார். மலேசியாவில் அடர்ந்த காடுகளுக்கு பக்கத்தில் ஷுட்டிங் எடுத்தோம். எந்த நேரத்தில் என்ன மிருகம் வருமோ என்ற அச்சத்தோடுதான் ஷுட்டிங் நடந்திச்சு. ஆனா அங்கு இல்லாத அச்சத்தை பைட் சீன்ல காட்டிட்டாங்க. நல்லவேளை பல்லு போகலை. அவ்வளவுதான்’ என்றார் திகிலோடும் அச்சத்தோடும். (எத்தனை பேரோட பல்ல புடுங்கியிருப்பீங்க?)

தயாரிப்பாளர், இயக்குனர் எல்லாருமே மலேசியா என்றாலும், படத்தின் பெரும்பகுதியை இங்குதான் எடுத்திருக்கிறார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகம் என்று பல மாதங்கள் இந்த படத்திற்காக சுற்றாத சுற்றில்லையாம் இவர்கள். எல்.வி.கணேசன், முரளி சுப்பிரமணி ஆகிய இருவர் இசையமைத்திருக்கிறார்கள். ட்ரெய்லரை பார்த்தால் ஒரு ஹாலிவுட் படம் போலதான் இருந்தது.

ஆனால் படத்தின் ஹீரோயின் திவ்யாதான் நம்ம கோலிவுட்டுக்கும் பொருந்தாத வெட்க மோகினியாக இருந்தார். மைக்கை பிடித்தவர் வெட்கத்தில் முகம் சிவந்து, ஒவ்வொரு வார்த்தையாக பேசி முடிப்பதற்குள் இந்த பூனையா படத்துல பால் சட்டியவே கவுத்துது என்கிற அளவுக்கு இருந்ததுதான் ஆச்சர்யம்.

நீங்கள்லாம் நல்லா வருவீங்கம்மா!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நானும் என் மகளும் ஆங்கிரி பேட்தான் விளையாடுவோம்… அஞ்சான் நிகழ்ச்சியில் சூர்யா கலகல!

இன்று மீண்டும் தன் ரசிகர்களை சந்தித்தார் சூர்யா. ‘தோளின் மேலே பாரம் இல்லே... கேள்வி கேட்க யாரும் இல்லே...’ என்கிற அந்தஸ்தில்தான் இருக்கிறார் அவர். ஆனாலும், ‘அஞ்சான்...

Close