9 மாத குழந்தை மீது கொலை முயற்சி வழக்கு: பாகிஸ்தானில் வினோதம்

போலீசாரை தாக்கி கொல்ல முயன்றதாக ஒன்பது மாத ஆண் குழந்தை மீது பாகிஸ்தான் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ள வினோதமான சம்பவம் லாகூரில் நடந்துள்ளது.மூசா என்ற அந்த ஆண்குழந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதி ரபாகத் அலி, 12ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கினார். பின்னர் அந்தக் குழந்தையின் வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு காவல்துறையிடம் குறிப்பிட்டார். குற்றவாளிகளின் சார்பாக ஆஜரான இர்பான் தரார், மறு விசாரணையின்போது அந்த குழந்தை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் என்று தெரிவித்தார். குழந்தையின் மீது தவறில்லை என்று காவல்துறையினர் அறிவிக்கும் பட்சத்தில் அதற்கான ஜாமீன் உறுதி செய்யப்படும் என்றும் தரார் குறிப்பிட்டார்.

குழந்தையின் மீது வழக்கு பதிவு செய்த சம்பவத்தில் காவலர்களிடம் குழப்பம் நடந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரியான ரானா ஜப்பார் தெரிவித்தார். இந்தத் தவறுக்காக சப்-இன்ஸ்பெக்டர் காஷிப் அகமது என்பவரைப் சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தன் மகன் மீது, தன் மீது, மேலும் 25 பேர்கள் மீதும் காவல்துறை பொய்யான வழக்கினைப் பதிவு செய்துள்ளதாக மூசாவின் தந்தை கூறினார். தாங்கள் வாழும் பகுதியில் மின்சாரம் சரிவர அளிக்கப்படாததை எதிர்த்து போராட்டம் நடத்தியதே தாங்கள் செய்த தவறு என்று கூறிய அவர், காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையை நீக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டினார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
உலகின் பழமையான வானிலை அறிக்கை எகிப்தில் கண்டுபிடிப்பு

வானிலை முன்னறிவிப்புகள் நவீன காலத்திய விஞ்ஞானம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் எகிப்து நாட்டில் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான வானிலை அறிக்கை கல்வெட்டு...

Close