ஆஹா ஓஹோ அமலாபால்
மைனாவை தவிர தமிழில் அமலாபால் நடித்த எந்த படமும் ஓடியதாக தெரியவில்லை. இருந்தாலும் அமலா ஜுரத்தால் தெர்மா மீட்டரே வெடிக்கிற அளவுக்கு ஃபீலிங் காட்டியது தமிழ்ப்படவுலகம். மெல்ல மெல்ல முன்னேறி விஜய்க்கு ஜோடியாக நடிக்கிற அளவுக்கு உயர்ந்த அமலாபாலுக்கு அண்மையில் தலைவாவின் முடக்கம் தாங்கமுடியாத வருத்தத்தை கொடுத்திருக்கிறது. அவர் தற்போது உள்ளூரில் இல்லை. இருந்தாலும் தினந்தோறும் நெருக்கமானவர்களுக்கு போன் அடித்து நிலவரத்தை விசாரித்து வருகிறாராம். இவ்வளவு துன்பத்திலும் அவருக்கு ஒரு இன்பம். இவர் நடித்த பெஜவாடு ரவுடிலு என்ற படம் ஆந்திராவில் ஹிட்டானது. அப்படியே இந்தியில் டப் செய்து வெளியிட்டார்களாம். போன இடத்திலும் ஆஹா ஓஹோவாம். இந்தி வரைக்கும் நம்ம புகழ் பரவிடுச்சே என்பதுதான் அந்த இன்பம்.