நல்லா யோசிக்கிறாய்ங்க இவிய்ங்க!
அசால்ட்டாக லெப்ட் ஹேன்டின் உதவியுடன் பிக் பாக்கெட் அடிக்கும் ஒருவனுக்கு அந்த லெப்ட் ஹேண்டே எதிரியா மாறுனா என்னாகும்? (அட… என்னா மாதிரி சிந்திக்குறாங்கப்பா?) இந்த யோசனைக்கு வண்ண வண்ண பெயின்ட் அடித்தால், அதுதான் ‘பீச்சாங்கை’ டமிள் மூவி!
ஆசை ஆசையா ஒரு பீர் வாங்கி, அதை டேபிள்ள வச்சு திறக்கப் போற நேரத்தில பீச்சாங்கை வந்து புல் எதிர்ப்பு காட்டினால், பாட்டிலை எப்படி திறப்பது? இப்படி ஒரு பாடலில் காட்டப்படுகிற சுமார் ஒரு டஜன் எதிர்ப்பு சமாச்சாரங்கள், இந்த பீச்சாங்கையின் பிரச்சனையை(?) அப்படியே நமக்குள் டென்ஷனாக ஏற்றுகிறது. பிக்பாக்கெட் அடித்துவிட்டு ஓடி வருகிற ஹீரோவை பின்னாலேயே ஜனங்கள் துரத்த…. சரியாக ஒரு போஸ்ட் கம்பியை அந்த இடது கை பற்றிக் கொண்டு விடாமல் முரண்டு பிடிக்க, மாட்டினார் ஹீரோ. அப்புறம் ஒரே தர்ம அடி.
இந்த பீச்சாங்கைக்கும் ஹீரோவுக்குமான பிரச்சனைதான் என்ன? அப்புறம் எப்படி அதை தன் வழிக்கு கொண்டு வந்தார் ஹீரோ. இப்படி போகும் போலிருக்கிறது கதை. ஆர்.எஸ்.கார்த்திக் ஹீரோவாக நடித்திருப்பதுடன் அவரே தயாரித்தும் இருக்கிறார். முதலில் இப்படத்தை ஷார்ட் பிலிம்மாக அசோக் எடுக்கும்போது அதற்குள் ஹீரோவாக வந்தவர், அதுவே வொயிட் ஸ்கிரீனுக்கு பெரிய படமாக தாவும்போது தானே தயாரிப்பாளராகவும் ஹீரோவாகவும் அதற்குள் புகுந்து கொண்டார் அவர்.
படம் எடுக்கறது ரொம்ப கஷ்டங்க. அதுவும் போலீஸ் பர்மிஷன் வாங்கி படம் எடுக்குற கொடுமை இருக்கே… அதுக்கு இந்த பீச்சாங்கைகிட்ட அடிவாங்கியே சாவலாம் என்கிறார் கார்த்திக்.
நல்லவேளையாக இந்தப்படத்தை பற்றிய விஷயங்கள் இன்டஸ்ட்ரியில் பரவ துவங்கிய நேரத்திலிருந்தே ஒரே பாசிட்டிவ் அப்ரோச்கள்! படத்தை முடிச்சுட்டு காமிங்க. நாங்களே ரிலீஸ் பண்றோம் என்று நிறைய பேர் கிளம்பி வருகிறார்களாம். எதுக்கும் பீச்சாங்கை முன்னாடி வந்து இடைஞ்சல் பண்ணாம டீல் பண்ணுங்க கார்த்திக்!