நல்லாயிருக்கிற நடு வீட்ல, கல்ல கொண்டு களி கிண்டுவாங்க போலிருக்கே?
ஓட்ற பஸ்சில் கல் வீசணும், ஓரமா நிக்கிற மரத்தை வெட்டி ரோட்ல போடணும், சோடா பாட்டிலை ஓப்பன் பண்ணாமலேயே வீசி உடைக்கணும்… இது போன்ற போட்டிகளை ஒலிம்பிக்கில் வைத்தால் தமிழனை வெல்ல ஆளே இல்லை. கொஞ்ச நாட்களாக இதெல்லாம் குறைந்திருக்கிறது என்று நினைத்தால், டைரக்டர் முத்துராமலிங்கன் விட மாட்டார் போலிருக்கிறது.
அவர் இயக்கி இம்மாதம் வெளிவர இருக்கும் ‘சினேகாவின் காதலர்கள் ’ படத்தில் காதலுக்காக உயிரை விட்ட தர்மபுரி இளவரசன் கேரக்டர் ஒன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளதாம். ‘வெறும் காதலோடு போச்சு’ என்று விட்டிருக்கலாம். அந்த கொலைக்கு காரணமானவர்களை ஒரு பிடி பிடிக்கிறேன் பேர்வழி என்று பெரிய மருத்துவர் ஐயா, சின்ன மருத்துவர் ஐயா ஆகிய ரெண்டு பேரையும் வசனங்களை கட்டி வம்புக்குள் இழுத்திருக்கிறாராம்.
இந்த விஷயம் மெல்ல வெளியே கசிந்து பற்றிக் கொண்டு எரிகிறது திரையுலகத்தில். ஆணானப்பட்ட ரஜினி படத்தின் பெட்டியையே அள்ளிக் கொண்டு சென்றவர்கள் அவர்கள். என்னதான் க்யூப் மூலம் நேரடியாக தியேட்டரில் படம் போடுகிற வசதி இருந்தாலும், இப்படியா சீண்டுவது? என்றும் முத்துராமலிங்கனை அச்சப்படுத்துகிறார்களாம் இன்னொரு குரூப். விஷயமறிந்த விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன், ‘தம்பி படத்தை காட்டுங்க. நீங்க சொல்றதுல நியாயம் இருந்தா நாங்க இருக்கோம் பக்க பலமாக’ என்கிறாராம். அவருக்காக ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நல்லாயிருக்கிற நடு வீட்ல, கல்ல கொண்டு களி கிண்டுவாங்க போலிருக்கே?