இரயிலில் ஒரு காதல்! 150 தியேட்டர்களில் ‘ சிக்கிக்கு சிக்கிக்கிச்சு ’

‘என்.சி.ஆர்.மூவி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் கே.சுந்தர் ராஜன், கே.பாலசுப்பிரமணியன், என்.ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சிக்கிக்கு சிக்கிக்கிச்சு’. ’நாளைய இயக்குநர் சீஸன்-2’வில் பணியாற்றிய என்.ராஜேஷ் குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கி இருக்கிறார்.‘எங்கேயும் எப்போதும்’, ‘சென்னையில் ஒரு நாள்’ ஆகிய படங்களில் நடித்த மிதுன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். புதுமுக நாயகி மிருதுளா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஆதவன், அனூப் அரவிந்த், அஞ்சலி தேவி, ரோமியோ பால், அருண் ஆகியோரும் நடித்துள்ளனர்.

செப்டம்பர்-11 அன்று வெளியாகிறது – சிக்கிக்கு சிக்கிக்கிச்சு’. பல வெற்றிப்படங்களை வெளியிட்ட ஸ்டுடியோ 9 நிறுவனம் ‘சிக்கிக்கு சிக்கிக்கிச்சு’ படத்தை தமிழகம் முழுக்க சுமார் 150 திரையரங்குகளில் வெளியிடுகிறது. ‘சிக்கிக்கு சிக்கிக்கிச்சு’ என்ற தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது. என்ன கதை என்று இயக்குநர் ராஜேஷ் குமாரரிடம் கேட்டால்..

‘‘இப்படத்தின் கதை முழுக்க முழுக்க ரயிலில் நடக்கிறது. சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் இரயிலில் கதாநாயகன், கதாநாயகி இருவருக்கும் நாகர்கோவில் வரை பயணிக்கின்றனர். அப்போது இருவருக்கும் இடையில் ஏற்படும் நட்பு.. புரிதல்.. காதல் மற்றும் அங்கே நடைபெறும் விறுவிறுப்பான சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் படத்தின் கதை. படத்திற்கு ஏன் இப்படி ஒரு தலைப்பை சூட்டியிருக்கிறீர்கள் என்று படம் தொடங்கிய நாளிலிருந்தே என்னிடம் நிறைய பேர் கேட்டார்கள்.

‘சிக்கிக்கு சிக்கிக்கிச்சு’ என்ற டைட்டிலுக்கான விளக்கத்தை படத்தை பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள். இந்த கதைக்கு இந்த டைட்டிலை தவிர வேறு எந்த டைட்டிலும் பொருத்தமாக இருக்காது என்பதால் இந்த டைட்டிலை வைத்தேன். இந்த படம் பார்க்கும் அனைவருக்கும் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் ஒரு படமாக இது இருக்கும்’’ என்கிறார் இயக்குநர் ராஜேஷ்குமார். இப்படத்தின் ஒளிப்பதிவை என்.எஸ்.ராஜேஷ்குமார் செய்திருக்கிறார். அறிமுக இசை அமைப்பாளர் விஜய் பெஞ்சமின் இசை அமைத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நரிக்குறவர்களின் வாழ்க்கையை சொல்லும் நாடோடிகள்!

நரிக்குறவர்களின் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. ஊர் ஊராக சென்று பாசி மணி ஊசி மணி விற்று வந்த அவர்களின் இன்றைய வாழ்க்கை என்னவாக இருக்கிறது? ஒரு குழுவாகவே...

Close