பிரசாந்துக்கு ஃபிகர் கிடைச்சாச்சு!
உலகத்திலிருக்கும் வொண்டர்ஃபுல் பிகர்களையெல்லாம் தேடிப்பிடித்து ஜோடியாக்கிக் கொள்ளும் மச்சம் பிரசாந்துக்கு இருக்கிறது என்பதை மற்றுமொரு தடவையாக நிரூபித்திருக்கிறது அமென்டாவின் வரவு! ‘நாங்களும் எட்டு மாசமா தேடாத இடமில்ல, வேண்டாத தெய்வமில்ல…’ ரேஞ்சிற்கு பில்டப் கொடுக்கிறார் தயாரிப்பாளர், இயக்குனர், எல்லாவற்றுக்கும் மேல் பிரசாந்தின் அப்பா என்ற முறையில் தியாகராஜன். இந்த அமென்டாவை கடைசியில் ஆஸ்திரேலியாவில் கண்டு பிடித்தாராம். எல்லாம் இவரே தயாரித்து இயக்கிவரும் சாஹசம் படத்திற்காக.
இங்கிலாந்து அப்பா, இந்தியா அம்மா இருவரின் கூட்டு தயாரிப்பில் உருவான அமென்டாவுக்கு ஆயிரம் திறமைகள் இருக்கின்றன. அதில் ஒன்று தமிழ் வசனங்களை சடக்கென புரிந்து சரமாரியாக ஒப்பிப்பது. விழுந்து விழுந்து மனப்பாடம் செய்து நடிக்கும் நடிகைகள், ஷுட்டிங் ஸ்பாட்டில் லைட்டை போட்டால் மொத்தத்தையும் மறந்து போய் இயக்குனரை அலற வைப்பார்கள். அதுபோன்ற எந்த சோதனைக்கும் இடம் கொடுப்பவரல்ல இந்த அமென்டா என்கிறார் பிரசாந்த்.
எப்படியோ… இவர் வந்து சேர்ந்த பின் சுமார் 40 நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள். நேற்று பிரஸ்சை சந்தித்துவிட்டு அப்படியே பிளைட் ஏறி ஆஸ்திரேலியா கிளம்புகிற அவசரத்தில் வந்து சேர்ந்தார் அமென்டா. தமிழில் கேட்கப்பட்ட கேள்விகளை அப்படியே பிரசாந்திடம் ஆங்கிலத்தில் கேட்டு திக்கி திணறி பேசிக் கொண்டிருந்தது கிளி.
படமே முடிந்துவிட்டது. இனி பாடல் காட்சிகள்தான் பாக்கி. உலகத்தின் எல்லா மூலைகளையும் செக் பண்ணிய தியாகராஜன், ஏதோ இயற்கை எழில் கொஞ்சம் தேசங்கள் சிலவற்றை டிக் பண்ணி வைத்திருக்கிறாராம். அதுவும் எடுக்கப்பட்டு முடிந்தபின், மே மாதத்தில் படம் வெளிவரலாம் என்கிறார்கள்.
பதினைந்து வருஷங்களுக்கு முந்தைய பிரசாந்த் போல, சிக்கென காட்சியளிக்கும் பிரசாந்தை பெரிய திரையில் பார்த்து ரசிப்பதற்காகவே காத்திருக்கலாம்.