அட… இதுக்கும் கோர்ஸ் வந்தாச்சா?

கவுன்ட்டரில் கையை விட்டு டிக்கெட் வாங்குவது எப்படி? அவரவர் சீட்டில் உட்கார்ந்து படம் பார்ப்பது எப்படி? இன்டர்வெல்லில் இஞ்சி மரபா தின்பது எப்படி? என்பது மாதிரியான இன்றியமையாத கலைகளை பற்றி மட்டும்தான் தனியார் கல்வி நிறுவனங்கள் கோர்ஸ் எடுக்கவில்லை. மற்றபடி சினிமாவில் எல்லாவற்றும் கோர்ஸ் வந்துவிட்டது. மூன்றே மாதத்தில் முடி திருத்தலாம். நான்கே மாதத்தில் நகம் வெட்டலாம், என்பதை போல ‘பத்தே நாளில் படமெடுக்கலாம்’ என்றும் கோர்ஸ்கள் வரக்கூடும்.

வேடிக்கை என்னவென்றால் இதுபோன்ற நிறுவனங்களில் கிளாஸ் எடுக்க போய் பழகிவிட்ட சில சினிமாக்காரர்கள், ‘ஏன் இந்த வேலையை நம்மளே செஞ்சா என்ன?’ என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். சினிமா என்பது திறமை மற்றும் அறிவு மற்றும் கற்பனை சக்தியை சார்ந்த விஷயம் என்பது போய், பணமிருந்தால் படிக்கலாம் என்றாகிவிட்டது. இதில் கொடுமை என்னவென்றால், சினிமாவுக்கு பாட்டு எழுதுவது எப்படி என்றும் சொல்லிக் கொடுக்க கிளம்பியிருந்தார் கவிஞர் ப்ரியன்

பிரபல கல்வி நிறுவனமான எஸ்ஆர்எம் நிறுவனத்துடன் இணைந்து இந்த பாட வகுப்பை எடுத்துக் கொண்டிருந்தார் அவர். நடுவில் என்ன பிரச்சனையோ? அந்த நிறுவனத்தின் துணையே வேண்டாம் என்று கிளம்பிவிட்டாராம். தற்போது இந்த பாட்டெழுதும் கலையை இவரே சொந்தமாக சொல்லித்தர போகிறாராம். அதுவும் தன் சொந்த கட்டிடத்தில்.

விஷயத்தை கேள்விப்பட்டதிலிருந்து கவிப்பேரரசு வைரமுத்து, நா.முத்துக்குமார், சினேகன், யுகபாரதி போன்ற முன்னணி கவிஞர்கள் இருக்கிற போட்டியில இந்த அப்ரசண்டுங்களும் கிளம்பி வந்தா என்னாவறது என்று பேஸ்தடித்து போயிருக்கிறார்களாம்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘அவ கூட சேர்ந்தே? உருப்புடறதுக்கு வழியே இல்ல…’ மம்மி அட்வைஸ், மகள் தவிப்பு?

‘அவ கூட சேர்ந்தே? உருப்புடறதுக்கு வழியே இல்ல...’ ஏதோ நடுத்தர வர்கத்தின் குடும்ப கோஷம்தான் இது என்று நினைத்திருப்பவர்களுக்கு செம ஷாக். தன் மகள்களை இப்படி கண்டிக்கும்...

Close