மன்மதன் சிவகார்த்திகேயன்! சினிமாவுலகம் வியப்பு
‘நம்பி வாங்க, சந்தோஷமாக போங்க’ என்பதையே ஒரு கொள்கையாக்கிக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். சுட்டீஸ் முதல் பாட்டீஸ் வரைக்கும் சிரிக்கணும், ரசிக்கணும் என்பதால், ‘எங்க வீட்டுப் பிள்ளை’ இமேஜ் கதைகளையே செலக்ட் செய்து வரும் அவருக்கு, ‘ரெமோ’ ரொம்பவே ஸ்பெஷல். ரிலீஸ் நெருங்க நெருங்க எல்லாருக்கும் இருக்கும் டென்ஷன் சிவகார்த்திகேயனுக்கு இருக்குமோ, இல்லையோ… ஆனால் அவர் ஆபிஸ் டென்ஷன் ஆகிக் கிடக்கிறது.
ரிலீசுக்குள் சுமார் 100 சிலைகளாவது செய்து முடிக்கணுமே என்கிற டென்ஷன்தான் அது. ‘ரெமோ’ ஸ்பெஷலாக உருவாகிக் கொண்டிருக்கிறது எட்டடி உயரம் கொண்ட மன்மதன் சிலைகள். காதல் அம்பை தொடுத்து ரதியை தூங்க விடாமல் செய்த மன்மதனைதான் காதலின் கடவுளாக சித்தரித்து வருகிறது நம்ம கல்ச்சர்! அந்த கல்ச்சருக்கு கொஞ்சமும் அல்சர் வந்துவிடாதபடிதான் இந்த சிலையை அமைக்க சொல்லியிருக்கிறாராம் ‘ரெமோ’ தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.
படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர் வாசலில் எட்டடி உயரத்திற்கு வைக்கப்படும் இந்த மன்மதன் சிலை, ஒரு மாயத் தோற்றத்திற்காக கூட சிவகார்த்திகேயன் முகத்தை காப்பி அடிக்கவில்லை. ஒரிஜனல் மன்மதன் சிலையைதான் வைக்கப் போகிறார்களாம். ‘இதென்னடா புது யோசனையா இருக்கு?’ என்று இன்டஸ்ட்ரி வியந்து கொண்டிருக்க, மேற்படி சிலைகள் சீனாலிருந்து இறக்குமதி செய்யப்படவில்லை என்பதுதான் ஆறுதல்.
ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் தலைமையில் இங்கிருக்கும் தொழிலாளர்களை கொண்டு ராப்பகலாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது 100 பேர் கொண்ட குழு!
To listen audio click below :-