நடுத்தெருவில் சண்டை! வாலிபருக்கு பளார் கொடுத்த சூர்யா மீது போலீசில் புகார்!
சென்னையை பொருத்தவரை அன்றாடம் நடக்கிற விஷயம்தான். ஆனால் நமக்கென்ன என்று போகாமல், கீழே இறங்கி முறைப்படி (?) விசாரித்த சூர்யாவுக்கு இப்போது தலைவலி. என்ன? எதற்காக? எப்படி? எங்கே?
நேற்று அடையாறு பகுதியை கிராஸ் செய்த சூர்யாவுக்கு கடும் எரிச்சல். ஏன்? வண்டி நகர்ந்தால்தானே? ஒரே கூட்டம். இரண்டு இளைஞர்கள் ஒரு இளம்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்களாம். இறங்கி விசாரித்த போதுதான் தெரிந்தது… இளைஞர்களின் டூ வீலர் அந்த பெண்ணின் கார் பின் பகுதியில் மோதியிருக்கிறது. இந்த சடர்ன் பிரேக் சமாச்சாரத்தால்தான் இவ்வளவு வாக்கு வாதம். அமளிதுமளி. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சூர்யா, வரம்பு மீறி பேசிக் கொண்டே போன அந்த இளைஞர்களில் ஒருவரான பீரவீண் என்பவர் கன்னத்தில் ஒரு பளார் விட, ஸ்பாட்டிலேயே சரிந்து விழுந்தாராம் அந்த நபர்.
தன் பாட்டுக்கு காரில் ஏறி போய்விட்டார் சூர்யா. மீண்டும் கண் விழித்த அந்த இளைஞர் அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் சூர்யா மீது புகார் கொடுத்துவிட்டார். நடு ரோட்டில் தன்னை தாக்கியதால் மானம் போய்விட்டதாகவும், அதனால் தான் தற்கொலை செய்து கொள்ள நேரிட்டால் அதற்கு சூர்யாதான் காரணம் என்றும் அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார் அவர். பொதுவாக இதுபோன்ற பெரிய இடத்தை பற்றி புகார் செய்தால் அலட்சியம் காட்டும் போலீஸ், இந்த முறை கம்பளைண்டை முறைப்படி வாங்கி முறைப்படி சி.எஸ்.ஆர் காப்பியும் போட்டுக் கொடுத்துவிட்டது.
ஆனால் நான் அந்த இளைஞரை தாக்கவேயில்லை என்று மறுத்திருக்கிறார் சூர்யா. ஸ்பாட்டில் இருந்த பெண் இன்று போலீஸ் நிலையத்திற்கு வந்து நடந்ததை விளக்கப் போகிறாராம்.
சிக்காத பெரிய மனுஷன் சிக்கிட்டாரு. சில்லரையை தேத்தாம விட மாட்டாய்ங்க போலிருக்கு!