லட்சுமி ராமகிருஷ்ணனின் விமர்சனத்தை மதிக்கிறோம்! திருடன் போலீஸ் இயக்குனரின் கண்ணியம்!
ஒரே சினிமாவில் இருந்தாலும் ஒருவரையொருவர் பிராண்டிக் கொள்கிற சீசன் போலிருக்கிறது இது. அண்மையில் வெளிவந்த ‘திருடன் போலீஸ்’ படம் திரையரங்குகளில் சிறப்பான கலெக்ஷனோடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. போன வார படங்களில் பாராட்டையும் கலெக்ஷனையும் அள்ளிய ஒரே படம் இதுதான். ஆனால் இந்த படத்தை பற்றியும் படத்தில் நடித்தவர்கள் பற்றியும் தனது ட்விட்டர் பக்கத்தில் தாறுமாறாக விமர்சனம் செய்து கொண்டிருந்தார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். ஏம்மா… தப்பு பண்றீங்களேம்மா… என்று திருடன் போலீஸ் சம்பந்தப்பட்ட ஒருவரும் இது குறித்து கவலைப்படவில்லை.
ஆனால் போகிற வருகிறவர்களெல்லாம் லட்சுமியை ரவுண்டு கட்டி பொளந்து விட்டார்கள். ‘நீங்க இயக்கி வெளிவந்த நெருங்கி வா முத்தமிடாதே படத்தை விட திருடன் போலீஸ் நல்லாதான் இருக்கு. முதல்ல நீங்க படம் எடுக்கறது எப்படின்னு கத்துக்கோங்க. அப்புறம் மற்றதை குறை சொல்லலாம்’ என்று போட்டுத் தாக்க, ஒருவழியாக இறங்கி வந்து ‘அதுவும் சரிதான்’ ஆகியிருக்கிறார் லட்சுமி. விமர்சனம் பண்ணுகிற உரிமை எல்லாருக்கும் இருந்தாலும், ஒரு இயக்குனர், இன்னொரு இயக்குனரை குறை சொல்வது அவ்வளவு நல்ல விஷயமல்ல என்று குமுறுகிறார்கள் கோடம்பாக்கத்தின் நடுநிலையாளர்கள்.
இது குறித்து ‘திருடன் போலீஸ்’ படத்தின் இயக்குனர் கார்த்திக் ராஜுவிடம் கேட்டோம். ‘உங்களுக்கும் லட்சுமிராமகிருஷ்ணனுக்கும் என்ன பிரச்சனை? ஏன் ஒரு கமர்ஷியல் சக்சஸ் படத்தை காறி துப்புறாங்க?’ என்றெல்லாம் கேட்டதற்கு, ‘அதுதாங்க எங்களுக்கும் புரியல’ என்றார் அவர். ‘இத்தனைக்கும் எங்க படத்தின் ஹீரோ தினேஷிடம் கால்ஷீட் கேட்டு அவர் மறுத்துருப்பாரோன்னு கூட சந்தேகப்பட்டோம். அவரும் அதெல்லாம் இல்லீங்கன்னு சொல்றார். இருந்தாலும் ஒரு சீனியர் நடிகை. அவங்க விமர்சனத்திற்கும் நாங்க மதிப்பளிக்கிறோம்’ என்றார் கார்த்திக் ராஜு. (மனுஷன்டா)
இது ஒருபுறமிருக்க, அமலாபால் புருஷர் விஜய் இயக்கிய சைவம் படத்தை உண்டு இல்லை என்று துவைத்து தொங்க போட்டிருக்கிறார் பில்லா சர்வம் படங்களின் இயக்குனர் விஷ்ணுவர்த்தன். இந்த வருஷத்துலேயே நான் பார்த்த மோசமான படம் சைவம்தான் என்று அவர் டி.வி யில் பேட்டியளிக்க, கொந்தளிக்கிறது கோடம்பாக்கம்.
முதுகுல இருக்குற அழுக்கு முகத்துல தெரியாத வரைக்கும் அவங்கவங்க அழகுதான்! சர்வம் படத்தின் லட்சணத்தைதான் நம்மளும் பார்த்தோமே!
Bill 1 Directed by Vishuvarthan not Billa 2