நடிகன்டா…. விழுந்தாலும், எழுந்தாலும் விஜய் சேதுபதி மனுஷன்!

எப்பவாவது ஷுட்டிங் பக்கம் வந்து, எப்பவாவது ஹிட் கொடுத்து, எப்பவாவது நல்லப்பிள்ளையாக நடந்து கொள்ளும் ஹீரோக்களையே வயிறார வாழ வைக்கிறது சினிமா. இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்குதான் பத்து கோடி, பனிரெண்டு கோடி என்று வாரிக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். (அது யாரா? நமக்கெதுக்குய்யா வம்பு?)

நாலு ஸ்டெப் மேலே ஏறினால் போதும், நாக்குல பம்பரம் முளைக்கும், தலையில கொம்பு முளைக்கும் என்பதெல்லாம் வேறு சிலருக்குதான். விஜய் சேதுபதிக்கு இல்லை என்பதற்கு ரீசன்ட் உதாரணம்தான் நாம் சொல்லப் போவது. தர்ம துரை படப்பிடிப்பு மதுரை பகுதிகளில் நடந்து வருகிறது. ஷுட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு அசம்பாவிதம், நல்லவேளை…. தலைக்கு வந்தது முடியோடு போச்சு. இருந்தாலும் பிரச்சனை கொஞ்சம் பெரிசுதான். இதுவே வேறு ஹீரோக்களுக்கு நடந்திருந்தால், ஒரே ஒரு சிங்கிள் வார்த்தையில் பேக்கப் சொல்ல வைத்துவிட்டு சென்னைக்கு திரும்பியிருப்பார்கள்.

அட… என்னதான் நடந்தது அங்கே?

காட்சிப்படி ஒரு டி.வியை தூக்கி அடிக்க வேண்டுமாம் விஜய் சேதுபதி. எடுத்தவர் ஓங்கி வீச, கீழே விழுந்த டி.வியிலிருந்து ஒரு பகுதி மட்டும் பிய்த்துக் கொண்டு வந்து அவரது கண்களில் அடிக்க… ஐயோ அம்மாதான் அப்புறம். அப்படியே உட்கார்ந்துவிட்டாராம் அவர். உடனடியாக முதலுதவிக்காக மதுரையிலிருக்கும் கண் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். இரண்டு நாட்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும். அதற்கப்புறம் தேவைப்பட்டால் ஆபரேஷன் என்று அவர்கள் சொல்ல, அதற்கப்புறம் நடந்ததுதான் அண்டர்லைன் அசத்தல்.

நான் வந்து இங்க படுத்துட்டா மொத்த யூனிட்டும் காத்திருக்கணும். இல்லேன்னா பேக்கப் பண்ணிட்டு சென்னைக்கு போகணும். அதனால் வேணாம். இந்த கண்ணை வச்சுகிட்டே நடிச்சுடுறேன் என்றாராம். அப்படியே அந்த முக்கியமான காட்சியை எடுத்து முடிக்கவும் உதவியிருக்கிறார்.

ஹீரோக்கள், சக ஹீரோக்களிடமே கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. முக்கியமாக விஜய் சேதுபதியிடம் கற்றுக் கொள்ள இன்னும் இருக்கிறது!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தெறி டீசர் பஞ்சாயத்து! அஜீத் ரசிகர்கள் மீது சந்தேகம்? கண்டுபிடிக்க ஸ்பெஷல் டீம்

நேற்றிரவு வெளியான ‘தெறி’ படத்தின் டீஸரை இதுவரை முப்பது லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்ததால் கன ஜோராக காலரை உயர்த்திக் கொண்டு கிளம்ப வைத்திருக்கிறது விஜய் ரசிகர்களை. அதுவும்...

Close