காஷ்மீர் எல்லையில சண்டையெல்லாம் ஒண்ணும் இல்லீங்க! நடிகர் பிரபு அழைப்பு?

ஊரே கொதித்தாலும் ஒரு இடத்தில் நிழல் இருக்கு என்பதை போல, இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதியான வாகா, இரு நாட்டு மக்களும் வந்து போக வாகா(ன) இடம்தான்! இரு நாட்டுக் தேசியக் கொடிகளும் அங்கு ஏற்றப்படுவதும், அதை இந்திய பாகிஸ்தான் டூரிஸ்டுகள் கூடி நின்று பார்ப்பதுமாக தினந்தோறும் நடைபெறும் நிகழ்ச்சி அது.

‘காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்…’ என்று எம்ஜிஆர் பாடி ஆடிய இடத்தில், இப்போது எத்தனை கொலை விழுந்ததோ, யார் கண்டது? ஆனால் வாகாவை மனதில் வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த காஷ்மீரிலும் தேன் ஆறு ஓடுவதாக நடிகர் பிரபு கூறியதை யாராவது மிலிட்டரிக்காரர் வந்துதான் மறுக்கணும். அல்லது ரசிக்கணும். தீபாவளித் திருநாளை முன்னிட்டு பிரஸ்சை மீட் பண்ணிய பிரபுவும், அவரது அன்பு மகன் விக்ரம் பிரபுவும், வாகா என்ற படத்தின் ஷுட்டிங் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.

அப்போது பேசிய பிரபு, காஷ்மீர் பிரச்சனை, வெடிகுண்டு, தீவிரவாதம்னு தினந்தோறும் சொல்றாங்க. ஆனால் என் மகன் வாகாங்கிற இடத்துல ஷுட்டிங் போயிட்டு வந்திருக்கான். அவ்வளவு அமைதியான ஊரா இருக்குதாம். எந்தப் பிரச்சனையுமில்ல. இருபது நாள் அங்க இருந்து ஷுட்டிங் பண்ணியிருக்காங்க. அங்கிருக்கிற காஷ்மீர் மக்களாகட்டும்… இந்திய மக்களாகட்டும். அவ்வளவு அன்பா பழகியிருக்காங்க. இங்கியிருந்து கூட நாம அடிக்கடி அந்த பக்கம் சுற்றுலாவாக போகலாம். இங்கிருக்கிற டூரிஸ்ட் அமைப்புகள் அதை செய்யணும் என்றார்.

ஒருபுறம் இப்படி பேசிக் கொண்டிருந்தாலும், வாகா படத்தில் கண்டிப்பாக ஒரு பாகிஸ்தான் தீவிரவாதி இருப்பார். அவருக்கு விக்ரம் பிரபு திகட்ட திகட்ட அட்வைஸ் கொடுப்பார் என்பதை மட்டும் யூகிக்க முடிகிறது. எனிவே… வாகா வின் பர்ஸ்ட் லுக் சூப்ப்ப்ப்ப….ர்ப்பு!

2 Comments
  1. Rajendran says

    “காஷ்மீர் மக்களாகட்டும்… இந்திய மக்களாகட்டும். அவ்வளவு அன்பா பழகியிருக்காங்க.”

    What he / you mean???????

  2. prabhakaran says

    wagah kashmirla ill sir. Adhu punjabla irukku.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிரபாஸ்க்கு வேறு பெண் முடிவு? கடும் விரக்தியில் அனுஷ்கா! குடும்பம் குதறிய காதல்?

போன மாசம் வரை இந்த செய்தியில் பிரபாஸ்சை பிரதானப்படுத்தியிருந்தால், தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு தவுடும் புரிந்திருக்காது. உமியும் புரிந்திருக்காது. பாகுபலிக்கு பின்தான் பிரபாஸ் ஆல் லாங்குவேஜ் ஆணழகனாச்சே? கொட்டாம்பட்டி...

Close