காதலனுடன் தியேட்டருக்கு வந்த நடிகை
‘ஆம்பிளைகளோடு வாழ முடியாது. ஆம்பிளை இல்லாமலும் வாழ முடியாது’ என்றொரு அரிய பெரிய தத்துவத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த நடிகை சோனா, பிரபல புலனாய்வு இதழில் எழுதிய கட்டுரை இன்டர்ஸ்ட்ரியையே அதிர வைத்தது. ‘கைய புடிச்சு இழுத்துட்டாரு’ என்று எஸ்.பி.பி.சரண் மீது போலீசில் புகார் கொடுத்து ‘விருப்பமில்லேன்னா விடுங்களேன்ப்பா…’ என்று அச்சப்படுத்தியதும் அவரேதான்.
அதற்கப்புறம் கோடம்பாக்கத்தில் பார்ட்டிக்கென்றே அலையும் கால்சட்டை பசங்களின் அலைச்சலும் கணிசமாக குறைய ஆரம்பித்தது. அப்படி கூடி கூடி குடித்தாலும் அந்த கூட்டத்தில் பெண்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள். இவ்வளவு சிறப்புக்கும் உரிய சோனா, தனது சொந்தக்கதையை படமாக்கப் போகிறேன் என்று கூறி ஒரு நாட்டு வெடிகுண்டை எந்நேரமும் வெடிக்க தயார் நிலையில் வைத்திருப்பதையும் மக்கள் அறிவர்.
இப்படிப்பட்ட துணிச்சல்காரரான சோனாவுக்கு காதலர் இருக்கிறாரா? அல்லது கணவர் இருக்கிறாரா? என்றெல்லாம் ஏராளமான கேள்விகளோடு அலையும் கிசுகிசு உள்ளங்களுக்கும் நாடு முழுக்க பஞ்சமில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் மான் கராத்தே படம் பார்க்க ஒரு அழகான இளைஞருடன் தியேட்டருக்கு வந்திருந்தார் சோனா. வடபழனி ஏரியாவில் அமைந்திருக்கும் அந்த மால் தியேட்டருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் ஜோடியாக வந்தனர் இருவரும். இந்த இளைஞரை சோனாவின் காதலராக இருக்குமோ என்கிற குறுகுறு பார்வையோடு உற்று நோக்க ஆரம்பித்தது மொத்த கூட்டமும்.
ஆனால் அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் மிக கேஷுவலாக அவருடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார் சோனா. ஒரு நடிகை பெரும் கூட்டத்திற்கு நடுவே படம் பார்க்க வருவதே பெரிய தலைசுற்றலை ஏற்படுத்திவிடும். அதுவும் ஒரு அழகான இளைஞருடன் அவர் வந்தால்?
என்னதான் அது அவரோட பர்சனல் லைஃப்னு எடுத்துகிட்டாலும்…. ஓப்பன் டைப் சோனா, உண்மையை சொல்லுவாரா?