ஹன்சிகா, தமன்னா, காஜலை தொடர்ந்து நாகார்ஜுனா, ஜீவா, பாபிசிம்ஹாவும்…! வெயிட்டை ஏற்றும் இஞ்சி இடுப்பழகி

பெரிதும் எதிர்பார்க்க படும் படங்களில் ஒன்றான ‘இஞ்சி இடுப்பழகி’ ரசிகர்களின் ஆர்வத்தை நாளுக்கு நாள் கூட்டிக் கொண்டு இருக்கிறது. இந்தப் படத்துக்காக கதாநாயகி அனுஷ்கா சுமார் 20 கிலோவுக்கு மேலாக எடைக் கூடினார் என்பது பிரதான அம்சமாக இருந்தாலும், தயாரிப்பு நிறுவனமான பிவிபி சினிமா இந்த திரைப்படம் வெற்றி பெறுவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அனுஷ்காவை போலவே ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படமும் தன்னுடைய எடையைக் கூட்டிக் கொண்டே இருக்கிறது.ஆர்யா, அனுஷ்கா , ஊர்வசி , பிரகாஷ் ராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளம் இருந்தாலும் இப்போது கௌரவ வேடத்தில் நாகார்ஜுன், ஜீவா, பாபி சிம்மா, ரானா ஆகியோருடன் ஹன்சிகா,தமன்னா,ஸ்ரீ திவ்யா, ரேவதி ஆகியோர் நடித்து உள்ளனர்.ஜீவாவும் , ஹன்சிகாவும் ஆர்யாவின் நெருங்கிய நண்பர்கள் என்பதாலும், பாபி சிம்மாவும், ஸ்ரீ திவ்யாவும் ஆர்யாவுடன் பெங்களூரு days remake படத்தில் இணைந்து நடித்து இருப்பவர்கள் என்பதாலும் மறுப்பேதும் இல்லாமல் உடனே ஒப்புக் கொண்டனர்.

‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் மையக் கருத்து அழகு என்பது உடல் அமைப்பிலோ, தோற்ற பொலிவிலோ இருப்பது அல்ல. நம்முள் இருக்கும் நல்ல எண்ணம் தான் உண்மையான் அழகு என்பதுதான். இந்தக் கருத்தை ஆமோதிக்கும் காஜல் அகர்வாலும் , தமன்னாவும் நடிக்க கேட்டவுடன் உடனே நடிக்க ஒப்புக் கொண்டனர் . அழகாக இருப்பதற்கு, இயற்கையான முறைகளே போதும் , செயற்கை சாதனங்கள் வேண்டாம் என்றக் காரணத்தை வலியுறுத்தும் ரேவதியும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.பி வி பி நிறுவனத்தாருக்கு நட்சத்திரங்கள் இடையே நல்ல தொடர்ப்பு இருந்து வருகிறது என்பதற்கு இதுவே சான்று.

பெண்களிடையே என்றும் பிரபலமாக இருக்கும் ஆர்யாவும் சமீபத்திய பிரம்மாண்ட வெற்றிகளால் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கபடும் அனுஷ்காவும் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தை இயக்கி இருப்பவர் பழம் பெரும் இயக்குனர் ராகவேந்திர ராவ் அவர்களின் மகன் கே எஸ் பிரகாஷ் ராவ். மரகத மணியின் இசையில் , மதன் கார்க்கியின் வரிகளில் வெளி வந்த ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல்களும் , முன்னோட்டமும் ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்து உள்ளது.

பல்வேறு தரப்பினரை கவரும் ‘இஞ்சி இடுப்பழகி’ இந்த மாதம் 27 தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Chennai’s First Tennis League Team V Chennai Warriors lounch Stills

Close