அவ்ளோ கோவமா லிங்கா மேல?

பொறுத்து பொறுத்து பார்த்து படம் எடுக்கக் கிளம்பிவிட்டார் லிங்காரவேலன்! லிங்காவால் ஏற்பட்ட நஷ்டப் பிரச்சனையை ஐ.நா சபை வரை ஒலிக்க வைத்த மாவீரன்! தலைவர் லிங்காவை ஊற்றி மூடிவிட்டு கபாலிக்கு போன பின்பும், இவரது கோபம் தீரவில்லை போலிருக்கிறது. ‘அட்றா மச்சான் விசிலு’ என்றொரு படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார். படம் என்ன டைப்? ஸ்பூப் வகைதான். அதாவது முன்பு வந்த படங்களை கிண்டல் செய்து எடுப்பது.

இவருக்கும் ரஜினிக்கும் ஏற்கனவே பிரச்சனை. இவர் எடுக்கும் படமோ ஸ்பூப் டைப். அப்படியென்றால் ரஜினி உள்ளே வருவார்தானே? வந்துவிட்டார்.

‘அட்றான் மச்சான் விசிலு’ படத்தில் ஒரு சீன்.

படத்தில் கபாலி என்ற பெயருடன் உலா வரும் ஹீரோவான பவர் ஸ்டார் சீனிவாசனை ஒரு தூணில் கட்டி வைத்து அடித்துக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல். சொல்றா… சொல்றா… என்று முதுகுத் தோலை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். நடுவில் வேடிக்கை பார்த்த ஒரு பொதுஜனம், “ஏன் சார் இந்தாளை போட்டு அடிக்கிறீங்க? காரணத்தை சொல்லுங்க” என்று கேட்க, அடிப்பவர்களின் லீடர் பதில் சொல்கிறான் இப்படி.

“இவன் தங்கச்சி போன வாரம் வந்து டாக்டர் சீட் கேட்டுச்சு. நாங்க இல்லேன்னு சொல்லியணுப்பிட்டோம். அதுக்கப்புறம் இவன் வந்தான். என் தங்கச்சிக்கு டாக்டர் சீட் கொடுன்னு கேட்டான். நாங்க முடியாதுன்னோம். உனக்கு என்னை பற்றி தெரியாதுன்னு இவன் பேரை சொன்னான். அப்படியே எனக்கு இன்னொரு பேரு இருக்குன்னு சொன்னான். நாங்களும் எவ்வளவோ அடிச்சு மிதிச்சு கேட்கிறோம். அந்த இன்னொரு பேரை சொல்லவே மாட்டேங்குறான்…”

ஸ்பூபில் சிக்கியது என்ன படம்? என்ன சீன் என்று புரியுதா?

அட்றா மச்சான் விசிலு திரைக்கு வந்து அஞ்சு வருஷத்துக்கு பேஸ்புக், வாட்ஸ் ஆப்பை ஓப்பன் பண்ண முடியாதே? பக்தர்களின் உருளல் புரளல் ஜாஸ்தியாக இருக்குமே?

அந்த இம்சைக்காகவே ப்ளீஸ் கூல், கொயட், லிங்காரவேலரே…!

1 Comment
  1. விஜய் மில்டன் says

    aantha asingam piditha singaaravelan padaththai naangal vara vidaamal thduppom.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சத்தமில்லாமல் உதவி! ஆன்ட்ரியாவுக்கு ஒரு லைக்!

மழை நின்னுருச்சு. ஆனா தவள சப்தம் ஓயல என்பது போல, வெள்ளம் வடிந்த பின்பும் இன்னல் தீராமல் இறுமிக் கொண்டிருக்கிறது சென்னை. இன்னும் பல இடங்களில் சாக்கடை,...

Close