ஆறு மணிக்கு மேல அவர் வேற அஞ்சலி? டைரக்டர் சூசகம்!

‘த்ரிஷா அடக்கமான பொண்ணு. ஷாட் ரெடின்னு சொல்லிட்டா போதும். அந்த அடக்கமெல்லாம் எங்க போவும்னு தெரியாது. கேரக்டர்ல ஒன்றி போய் பொறிந்து தள்ளிவிடுவார். ஆனால் அஞ்சலி அப்படியல்ல. ஆறு மணிக்கு மேல வேற அஞ்சலி. ஷுட்டிங் ஸ்பாட்ல சூரியோட செல்போனை தூக்கிப்போட்டு உடைச்சுட்டார்’ என்ற அரிய தகவலை கூறி, அஞ்சலியின் இமேஜையும் சேர்த்துப் போட்டு உடைத்துவிட்டார் டைரக்டர் சுராஜ்.

இவர் இயக்கி வரும் ‘சகலகலாவல்லவன்’ படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில்தான் இந்த சம்பவமாம். ‘அவரு நோட் ஃபைவ் வச்சுருந்தாரு. நோட் சிக்ஸ் வாங்கட்டுமேன்னு போட்டு உடைச்சேன்’ என்கிறார் அஞ்சலி. இந்த சண்டை சச்சரவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அந்த நோட் சிக்ஸ்சை அஞ்சலியே வாங்கித்தருவதாகவும் ஏற்பாடாம்.

அதிருக்கட்டும்… செல்போன்களை கையால் அழுத்தியே உடைத்துவிடுகிற அளவுக்கு மினி பொன்னம்பலமாகதான் இருக்கிறார் அஞ்சலியும். ஒரு ஒயின் பாட்டில், இப்படி அநியாயத்துக்கு வாட்டர் கேன் ஆகிருச்சே?

Read previous post:
பாலா தர்றது வலியில்ல… அனுபவம்! ஆனந்தப்படும் அதர்வா!

களவாணி, வாகை சூடவா மாதிரியான அடையாளம் காட்டும் படங்களை எடுத்த சற்குணம், ‘அப்புறம் எங்கேய்யா போனாரு?’ என்று ‘நய்யாண்டி’ பண்ணிய ஊருக்கு, ‘நான் இருக்கேன்ல?’ என்று வந்து...

Close