மீண்டும் கேப்டன் மகன்? குழம்பும் கோடம்பாக்கு!

இப்போதெல்லாம் கூட்டம் கூட்டமாக வருகிற போன் கால்களுக்கு கூட்டம் கூட்டமாக மரியாதை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் உதவி இயக்குனர்கள். “கேப்டன் மகன் சண்முவபாண்டியன் நெக்ஸ்டும் ஹீரோவா நடிக்கிறார். கதை கேட்டுகிட்டு இருக்கோம். நல்ல கதையா வச்சுருக்கிறவங்க மட்டும் அணுகவும்” என்றொரு அநாமதேய கால் வருகிறதாம். சம்பந்தப்பட்டவர்கள் கொடுக்கிற அட்ரஸ் போரூர் தாண்டி ஏதோவொரு முட்டு சந்தை நோக்கி!

வீரபாண்டிய கட்டபொம்மன் கதைக்கே மறுபடியும் வெள்ளையடிச்சு, ‘பாண்டிய வீர பொம்ம கட்டன்’ என்று பெயர் மாற்றிக் கொண்டு திரியும் உ.இ க்கள் கூட தன் கதையை புதுசு பிரமாதம் என்று நம்பிக் கொண்டிருக்கிற நாட்டில் நல்ல கதையோட வாங்க என்றால் கூட்டம் அள்ளாமலா இருக்கும்? ஏதோ எம்பிளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச் போல திரண்டு நிற்கிறார்களாம். தனித்தனி குழுவாக இவர்களிடம் கதை கேட்கும் விற்பன்னர்கள், “எந்நேரமும் போன் ஆன்ல இருக்கணும். சுவிட்ச் ஆஃப் பண்ணியிருக்கிற நேரம் பார்த்து நாங்க போன் பண்ணி நீங்க எடுக்கலேன்னா… போச்சு வாய்ப்பு! அப்புறம் எங்களை குறை சொல்லி பிரயோஜனம் இல்ல” என்றெல்லாம் பீதி கிளப்புகிறார்களாம்.

மேற்படி கதை ஸ்பாட்டில் கேப்டனோ, அவர் சம்பந்தப்பட்டவர்களோ, அட… தேமுதிக கரை வேட்டி ஆட்கள் கூட கண்ணில் தென்பட மாட்டேங்குறாங்களேப்பா… என்று கவலையுறும் உதவி இயக்குனர்கள், “யோவ்… இதையெல்லாம் பார்க்கும்போது கேப்டன் படத்துல வர்ற பாகிஸ்தான் தீவிரவாத கூட்டம் போல தெரியுது. எதுக்கு உஷாரா இருங்க” என்கிறார்கள்.

கேப்டன் பெயரை சொல்லி ஏதோ ஒரு திருட்டுக் கூட்டம் திரிவதை போலதான் தெரிகிறது நமக்கும். விசாரிங்க மக்கழே…!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கடுப்பேற்றிய சேனல்! கழுத்தறுத்த கமல்?

பாகுபலி மாதிரியான பிரமாண்டமான படங்கள்தான் கமலுக்கு சரியான தீனி! ஆனால் அவருக்கு ஏன் அப்படியொரு வாய்ப்பு இன்று வரை அமையவில்லை? இந்த கேள்வியை துரத்தினால், அது ஏகப்பட்ட...

Close