கை மாறிய ஐ ! கண்ணீர் வடிக்குது மற்றவர்களின் ஐ
ஐ எப்போது ரிலீஸ்? இந்த கேள்விதான் இப்போது சிறு பட தயாரிப்பாளர்களை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. டிசம்பர் 12 ல் ரஜினியின் ‘லிங்கா’ வரவிருப்பதால், அன்றிலிருந்து பொங்கல் வரைக்கும் எந்த படத்தை திரையிட்டாலும் ரிசல்ட் முட்டைதான்! லிங்கா என்ற பெருமுதலை வாய்க்குள் சிக்க விரும்பாத சிறு படங்கள், அதற்கு முன்பே நவம்பரில் வந்துவிடலாம் என்று கணக்கு போட்டால், அங்கேயும் வந்து ஐ பயத்தை ஊட்டுகிறார்கள்.
ஐ எப்போது வேண்டுமானாலும் திரைக்கு வரக்கூடும் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல். எப்படி? ஏன்? தனது முந்தைய படங்கள் பலவற்றை விநியோகம் செய்த மதுரை அன்பு அழகர் சகோதரர்களின் கணக்கை நேர் செய்ய, ஐ படத்தை அவர்களுக்கே கொடுத்துவிட்டாராம் ஆஸ்கர் ரவிச்சந்திரன். தமிழ்நாடு திரையரங்க விநியோகம் மேற்படி பிரதர்ஸ் கையில்தான். தியேட்டர் வட்டாரத்தில் செல்வாக்கோடு திகழும் இவர்கள், நினைத்தால் நாளைக்கே கூட ஐ யை வெளியிட்டு விடலாம். ஆனால் அவர்களோ நல்லநேரம், பஞ்சாங்கம் இத்யாதி இத்யாதி விஷயங்களுக்காக வெயிட்டிங்! இதையடுத்து நடுக்கத்துலேயே கிடக்குது சிறுபட வட்டாரம்!
ஒண்ணு.. யானைன்னு ஒதுங்க விடுங்க, இல்ல… பூனைன்னு நெருங்க விடுங்க! எதுக்கு இந்த இழுபறி?
இவிங்க எப்ப ரெலீஸ் பண்ணுறது ! நாங்க எப்ப அத டாரன்ட்ல பாக்குறது!