ஒரு வார கலெக்ஷன் கட்! ஐ முடிவால் அதிர்ச்சி

எல்லாம் ரெடி. பேங்க் லோன் மட்டும் கட்டிட்டா படம் வெளியில் வந்துரும். ஆனால் ஐ படத்திற்காக வாங்கப்பட்ட வங்கிக் கடன் பிரச்சனை என்னவாச்சு? இப்படியெல்லாம் EYE விரித்து கவலைப்பட்ட கோடம்பாக்கத்திற்கு அந்த சந்தேகமும் தீர்ந்தாச்சு. எப்படி? குறிப்பிட்ட வங்கி அதிகாரிகள் கூட நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் கொடுக்கிற அளவுக்கு திருப்தியாகிவிட்டதாக தகவல். அப்படின்னா முன்பே திட்டமிட்டிருந்தபடி படத்தை ஜனவரி 9 ந் தேதி வெளியில் விட்ற வேண்டியதுதானே?

அங்குதான் சிக்கலே. ஆக்ஷன், வன்முறை, மற்றும் கான்சப்ட் எல்லாவற்றுக்கும் சேர்த்து படத்திற்கு U/A சர்டிபிகேட் கொடுத்துவிட்டது சென்சார் அமைப்பு. இப்படி சர்டிபிகேட் கொடுக்கப்பட்டால் வரிவிலக்கு கிடைக்காது. இதனால் பெருமளவு பாதிக்கப்படுவது தியேட்டர்காரர்கள்தான். அங்கு கை வைத்தால், அவர்களிடமிருந்து வரும் கலெக்ஷனில் கை வைப்பார்கள். இப்படியெல்லாம் யோசித்த ஆஸ்கர் ரவிச்சந்திரன் மறு தணிக்கைக்கு சென்று எப்படியாவது U சான்றிதழ் பெற்றுவிட முயல்கிறார். அதனால்?

அந்த இழுபறியினாலும், இன்னபிற இன்றியமையாத பணிகளாலும் படம் திட்டமிட்டபடி 9 ந் தேதி வராதாம். 15 ந் தேதி பொங்கல் தினத்தன்றுதான் திரைக்கு வரும் என்கிறார்கள். இதனால் தயாரிப்பு தரப்புக்கும் விநியோகஸ்தர் தியேட்டர் வட்டாரங்களுக்கும் சுளையாக வந்து சேர வேண்டிய ஒரு வார கலெக்ஷன் கட். சற்றே அதிர்ச்சியில் இருக்கிறார்களாம் அத்தனை பேரும்.

‘ஆம்பள’ மட்டும் தனியா வரும் என்று ரீசண்ட்டாக கணக்கு போட்டிருந்த விஷாலுக்கு, இந்த தகவல் எவ்வித ஜெர்க்கையும் தரப்போவதில்லை. ஏனென்றால் ஷங்கரின் ஐ வந்தாலும் சரி, அஜீத்தின் என்னை அறிந்தால் வந்தாலும் சரி… மோதறதுக்கு நான் ரெடி என்று முதன் முதலில் ரிலீஸ் தேதியை அறிவிச்சவராச்சே?

முக்கிய குறிப்பு- படத்தின் பின் பகுதியில் குரூர விக்ரம் வருகிற பகுதிகள் அதிகம் வருவதால், அது குறித்த இருவேறு விமர்சனங்கள் எழுந்து வருவதாக படத்தை ஆங்காங்கே பார்த்தவர்கள் அங்கலாய்ப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘காசு போட்டு பேரு கெட்டு… ’ இளையராஜா பாட்டும், கவிழ்ந்த கப்பலும்!

மானம் ‘கப்பல்’ ஏறிவிடும் போலிருக்கிறது. எல்லாம் கப்பல் பட விவகாரம்தான். படத்தில் இசைஞானி இளையராஜாவின் ‘ஊரு விட்டு ஊரு வந்து’ பாடலை அப்படியே பயன்படுத்தியிருந்தார்கள். ‘கப்பல்’ சக்சஸ்...

Close