சுயசரிதை எழுதுகிறார் ஐஸ்வர்யா தனுஷ்! எதையும் மறைக்கப் போவதில்லை என அறிவிப்பு

எந்த காலத்திலும் ரஜினியின் புகழையும் திறமையையும் அவரது பிள்ளைகளால் முந்தவே முடியாது என்றாலும், ஐஸ்வர்யாவின் பன்முக திறமை பல நேரங்களில் வியக்க வைப்பதாகவே இருந்திருக்கிறது. “நான் ரஜினி பொண்ணுடா…” என்ற கோதாவே இல்லாமல் சினிமாவில் சொந்த திறமையால் ஜெயிப்பது மிக மிக கடினம். அதை அசால்ட்டாக செய்திருக்கிறார் அவர்.

எல்லாரும் வியக்கக்கூடிய மின் காந்தம் ஒன்றின் மகளாக இருப்பதே ஒரு விதத்தில் சவுகர்யம். இன்னொரு விதத்தில் பெருத்த அசவுகர்யம். இவ்விரண்டும் பற்றி ஐஸ்வர்யா பேச ஆரம்பித்தால் எத்தனை சம்பவங்கள் நம்மை அசர வைக்கும்? அவற்றைதான் ஒரு புத்தகமாக எழுதப் போகிறாராம் அவர். இந்த புத்தகத்திற்கு ஸ்டாண்டிங் ஆன் அன் ஆப்பிள் பாக்ஸ் (ஒரு ஆப்பிள் பெட்டி மீது நின்றுகொண்டு..) என்று பெயரிட்டிருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். இந்த புத்தகத்தை ஹார்பர் காலின்ஸ் பதிப்பகம் வெளியிடுகிறது.

ரஜினியின் பிறந்த டிசம்பர் 12 ந் தேதி இந்தியா முழுக்க வெளியாகும் இப்புத்தகத்தில் பல அதிர்ச்சிகரமான உண்மைகளையும் எழுதப் போகிறாராம் அவர்.

இது குறித்து ஐஸ்வர்யா தெரிவிக்கும் போது “ ஒரு நாள் இதுபோன்றதொரு புத்தகத்தை எழுதவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே அதற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டேன். என்னுடைய நினைவுகளில் இருந்த விசயங்களைப் பற்றி குறிப்புகளை எழுதினேன். என்னுடைய பசுமையான நினைவுகளை மீட்டெடுத்து வார்த்தைகளால் சேகரித்தேன். என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய அப்பாவின் தாக்கம் எப்படியிருந்தது என்பது குறித்து ஏராளமான விசயங்கள் கிடைத்தது. அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விசயங்கள், அவர் கடைபிடித்தவை. எனக்கு சொல்லிக் கொடுத்தவை என பலவற்றை இதில் தொகுத்திருக்கிறேன். இதனை ஒரு சிறிய கதையின் மூலமாக என்னுடைய வாழ்க்கையின் ஏற்றங்களையும், இறக்கங்களையும் என்னுடைய பார்வையில் சொல்லியிருக்கிறேன். எளிமையாக தொடங்கி சிக்கலான ஒன்றிற்குள் சென்றிருக்கும். இதனையும் நீங்கள் காணத்தான் (வாசிக்கத்தான்) போகிறீர்கள். ஹார்பர் காலின்ஸ் பதிப்பக நிறுவனத்தாருடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. அவர்களுடன் தொடர்ந்து மகிழ்ச்சியான நல்லுறவை எதிர்காலத்திலும் தொடர்வேன் என்று நம்புகிறேன். இந்த பதிப்பக நிறுவனத்தின் தலைமை ஆசிரியரான திருமதி வி கே கார்த்திகா அவர்கள் இதன் முதல் சில அத்தியாயங்களை படித்துவிட்டு பெரிய அளவில் வசிகரீக்கப்பட்டிருந்ததாக சொன்னார். அதனால் இந்த புத்தகத்தை உடனே வெளியிடவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஒரு ஆப்பிள் பெட்டி மீது நின்றுகொண்டு.. என்ற இந்த புத்தகத்தில் சினிமா களத்தில் இருந்து கொண்டு மகிழ்ச்சிகரமான கதைகளையும், நினைவுகளையும் பதிவு செய்திருக்கிறேன். இது எனக்கு மட்டுமே சொந்தமான அனுபவமாக இருந்தாலும் இதிலிருந்து பெண்களுக்கு தேவையான பல முன்னூதராணங்கள் பிரதிபலித்திருப்பதாகவே கருதுகிறேன். அத்துடன் ஒவ்வொரு பெண்ணின் சந்தோஷங்களையும், துக்கங்களையும் எப்படி சீர்தூக்கி பார்க்கவேண்டும் என்பதும் இடம்பெற்றிருக்கும்.

ஐஸ்வர்யாவின் எழுத்துக்கள் நிஜமாகவே உண்மையை மட்டும் வெளிப்படுத்தியிருந்தால், சிலரது அழுக்கு முகங்களும் அத்துடன் வெளிப்பட்டு விடும். அதில் சந்தேகமேயில்லை.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Vijaysethupathi Praised “Oyee” Trailer And Songs

Close