தேடிச்சென்ற அஜீத்! இதென்ன புதுசா இருக்கு?

அஜீத் எந்த டைரக்டரையும் தேடிப் போனதில்லை. அவரிடம் கதை சொல்வதற்காகதான் காத்திருக்கிறார்கள் பலரும். பில்லா, மங்காத்தா வெற்றிகளுக்கு பின்தான் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறாரா என்றால் அதுதான் இல்லை. கடந்த பல வருடங்களாகவே இதுதான் நிலைமை. கவுதம் மேனன் ஆகட்டும், வெங்கட் பிரபு ஆகட்டும், வீரம் சிவா ஆகட்டும்… அஜீத் வீட்டு கேட் திறந்தால்தான் எல்லாம் நடக்கும். ஆனால் அவரே  ஐதராபாத் சென்று டைரக்டர் விக்ரம் குமாரை சந்தித்து விட்டு வந்தார் என்றால் நம்பவா முடிகிறது? பட்… நம்பிதான் ஆக வேண்டும்.

யாவரும் நலம் சமயத்திலேயே அஜீத்திடம் ஒரு கதையை சொல்லி சம்மதம் வாங்கி வைத்திருந்தார் விக்ரம் குமார். அதற்கப்புறம் என்னென்னவோ காரணங்கள், ஏராளமான தயக்கங்கள்… அந்த படத்தை தொட(ர) முடியாமலே போனது இருவராலும். இப்போது மீண்டும் அதே கதையை படமாக்கலாம் என்று நினைத்திருந்தாராம் அஜீத். முதல் கட்ட பேச்சு வார்த்தைகளை போனில் பேசி முடித்தவர், சட்டென்று ஒரு நாள் கிளம்பி ஐதரபாத் சென்று அவரை சந்தித்துவிட்டு வந்தாராம். இருவர் மனசும் க்ளியர்.

அதே நேரம் இந்த பக்கம் தன்னை வைத்து படம் தயாரிக்க தயாராக இருக்கும் சத்யஜோதி பிலிம்சுடன் பேசி முடித்துவிட்டாராம் அஜீத். கே.வி.ஆனந்த் கேட்ட சம்பளம், கிறுகிறுக்க வைப்பதால், அவர் வேணாம் என்று கம்பெனி முடிவெடுத்திருப்பதாக கேள்வி. அந்த இடத்தில்தான் விக்ரம் குமாரை உட்கார வைக்க பேச்சு நடக்கிறதாம். விக்ரம் குமாரின் பணத்தாசையை பொறுத்துதான் இதுவும் நடக்குமா, படுக்குமா என்பது புரியும்.

இருந்தாலும் விக்ரம் குமார்- அஜீத் ? நினைத்தாலே இனிக்குதே!

Read previous post:
ஆவி குமார்- விமர்சனம்

இட்லி ஆவிக்கும் இடியாப்ப ஆவிக்கும் எந்த வித்தியாசமும் தெரியாதல்லவா? அப்படி இட்லி இடியாப்ப ஆவிகளாக கோடம்பாக்கத்தில் திரியும் அடியாத்தீ... ஆவிகளில் ஒன்றுதான் இந்த ஆவிகுமார். (நிஜத்தில் ஆவிகுமாரி..!)...

Close