சிவகார்த்திகேயனுக்கு அஜீத் அட்வைஸ்!
நுனிக் கிளைக்கு அட்வைஸ் பண்ண அடி மரத்தை விட்டால் சிறந்த தோழமை ஏது? அப்படிதான் எடுத்துக் கொள்ள வேண்டும் சிவகார்த்திகேயன் அஜீத்திடம் கேட்டு அறிந்து கொண்ட தகவல்களும், அட்வைஸ்களும்! ‘ரஜினி முருகன்’ ரிலீஸ் தள்ளி தள்ளி போகிறது. இந்த 17 ந் தேதி வந்துவிடும் என்று நம்பப்பட்ட படம் அது. பிரச்சனையென்னவோ போர்வையோடு திரிகிறது. கண்ணில் பட்ட தேதிகளையெல்லாம் போட்டு போட்டு மூடுவதே அதன் வேலையாகவும் இருக்கிறது. பார்க்கலாம்… 21 ந் தேதியாவது வருகிறதா என்று!
சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் ஷுட்டிங் நவம்பரில்தான் துவங்குகிறது. ஒளிப்பதிவுக்கு ஏற்ற அழகான தருணம் நவம்பரும் அதற்கடுத்த சில மாதங்களும்தான் என்று ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கொடுத்த அட்வைசின் பேரில் ஷுட்டிங் தள்ளிப் போவதாக தெரிகிறது. முன் தயாரிப்பு பணிகள் ஜரூராக நடந்து வர, ‘நேரமில்லை நேரமில்லை’ என்று ஓடிக் கொண்டேயிருந்த சிவகார்த்தியேன், ஆற அமர தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் ஒவ்வொன்றாக. அதில் ஒன்றுதான் அஜீத்துடனான சந்திப்பு.
இந்த சந்திப்பின் போது நிறைய பேசியிருக்கிறார் அஜீத். எப்படி எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று எச்சரித்திருக்கிறார். நிற்கிற இடம் சொரசொரப்பாக இருந்தால், நன்றாக கவனி. நீ நிற்பது முதலையின் முதுகாகவும் இருக்கலாம் என்றெல்லாம் அவர் தன் வாழ்க்கையிலிருந்தே உதாரணங்கள் காட்ட, பேரதிர்ச்சிக்கு ஆளானாராம் சிவா. அவர் சொன்னது மாதிரி நடந்தால் போதும். நான் மிக சிறந்த மனிதனாக இருக்க முடியும் என்று நெகிழ்கிற சிவா, அஜீத் சொன்ன ரெண்டு ரெண்டு விஷயங்களை பின்பற்றுவதுதான் ரொம்பவே சிரமம் என்கிறார்.
அதென்னவாம்? எல்லாத்தையும் சொல்லிட்டா கிக் ஏது…. பிறகு, அப்புறமா, மெல்ல சொல்லுவார். கேட்டுப்போம்!