தியேட்டர்கள் போட்ட குண்டு! அதிர்ச்சியில் அஜீத், விஜய் படங்கள்!

‘ரத்தத்தை பிடிச்சு சித்திரம் வரைஞ்சா, அதை வரைஞ்சு முடியறதுக்குள்ள வரைஞ்சவனுக்கு சங்குதான்டீய்…’ என்கிற வாழ்க்கை தத்துவத்தை புரிந்து கொள்ளாத பீல்டு சினிமா பீல்டு மட்டும்தான்.

யாரோ ஒரு ஏமாளி சிக்கிட்டான் என்று நினைத்துக் கொண்டு தயாரிப்பாளரின் நாடி நரம்பையெல்லாம் சம்பளமாகவும் கொடூர கூலியாகவும் உருவுகிற கும்பல்தான் இப்போது சினிமாவில் முன்னணியில் இருக்கிறது. அவருக்கு அவ்ளோ சம்பளம். இவருக்கு இவ்ளோ சம்பளம் என்று காதில் கேட்கும்போதே கிர்ரடிக்கிறது. இதையெல்லாம் சமாளித்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், அதை தியேட்டருக்கு கொண்டு வந்தால் அங்கும் ஒரு சிங்கிள் டான்ஸ் குருப் வந்து ஐய்யோ குய்யோ என்றால் நிலைமை என்னாவது?

இன்று திரையரங்க உரிமையாளர் சங்கமும் மல்டிபிளக்ஸ் அதிபர்கள் சங்கமும் இணைந்து ஒரு முடிவெடுத்து அதை விநியோகஸ்தர் சங்கத்திற்கு அனுப்பியுள்ளது. என்ன தெரியுமா? இதுவரை படத்தை வெளியிடுகிற தியேட்டர்காரர்கள் வாங்கி வந்த சதவீதம் போதவில்லையாம். அதனால் ரஜினி, விஜய், அஜீத் படங்களுக்கு 60 முதல் 65 சதவீதம் வரை பங்கும், சூர்யா, ஜெயம் ரவி, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களுக்கு 55 முதல் 60 சதவீதம் வரை பங்கும் பிற நடிகர்களுக்கு ஐம்பது சதவீதம் வரையும் நிர்ணயித்திருக்கிறார்கள்.

மேட்டூரில் அணை வற்றினால் எப்படி நாகை மாவட்டம் நாக்கு வற்றிப் போகுமோ, அப்படிதான் தியேட்டர்காரர்களின் இந்த பேராசை தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். நமக்கென்ன… தயாரிப்பாளர் பாடு, விநியோகஸ்தர் பாடு என்று சும்மாயிருந்துவிடவும் முடியாது ஹீரோக்களால்.

இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கப் போகிறார்களோ? முக்காலியிலும் ஒரு காலை உருவுறீங்களே ஐயா?

3 Comments
 1. Velu says

  mattare illa. oru rendu theatre vantha pothum. Meethi thaana varum

 2. JOSEPH VIJAY says

  இந்திய சினிமாவின் ஒரே வசூல் சக்ரவர்த்தி சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் மட்டும் தாண்டா.

 3. NaveenBala says

  NGK நியூ ஜெர்சி பிரீமியர் review : mr லோக்கல் படத்துக்கோட compare பண்ணுனா NGK பரவால்லே. ஆனா நாட்டுக்கு நல்லது பண்ண வேண்டும்ன்னு ஒரு சாதாரண இளைஞன் cheif மினிஸ்டர் ஆகுற சிம்பிள் கதை, climaxla cheif minister ஆகுறதோட நின்னுருது, அவர் cm ஆய் என்னத்த கிழிச்சாருன்னு ஒரு 2 நிமிட சீன் ஒரு ஜஸ்டிபிகேஷன்காக வெச்சுருக்கலாம் . ஹீரோவுக்காக ஒரு எமோஷனல் connect வரல. First half ல இளவரசு MLA ரோலில் சூர்யாவை அசால்ட்டா தூக்கி சாப்பிட்டு விடுவது உண்மை. சாய் பல்லவியின் சதேகப்படும் character எரிச்சல் தான் கொடுக்குது. பிக்ஸு சூர்யாவிற்காக சாகுறா கேரக்டர், nalla vechu பண்ணிருக்கார். வில்லனாக சரண்யா புருஷன் பொன்வண்ணன், கன்னட தேவராஜ், வேலா மூர்த்தி, தலை வாசல் விஜய், எல்லாருமே கெட்ட அரசியல் வாதிகலா வெறும் புஷ். ஒன்னும் மெரட்டல. தொண்டனாக வரும் பாலா சிங் கலக்கி இருக்கார்.
  சூர்யா ஒரு காமன் man ஆ நடிக்காம ஹீரோயிசம் பண்ணி படுத்துறார், but சில எமோஷனல் சுசீன்ல நல்லாவே நடிச்சிருக்கார். எடிட்டர் தான் படத்தையே காப்பாத்தி இருக்கார். யுவன் பாடல்கள் படத்துக்கு பலம் சேர்க்க வில்லை. ஒரே ரத்த வாடை படத்துல. இது செல்வா ஸ்டைல் படம் இல்ல. பெட்டெர் than mr லோக்கல். ஆனால் ஜஸ்ட் எ ஆவெரேஜ் படம்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Oththa Serupu – Official Tamil Trailer HD

https://www.youtube.com/watch?v=zaLZimXP2Ak

Close