நள்ளிரவு… மவுண்ட்ரோடு… சிறிய காரில் அஜீத் அவரை நெருக்கிக் கொண்டு நால்வர்?

சென்னையின் அடையாளமாக கருதப்படுவது மவுண்ட் ரோடு. ஒரு டைனோசரின் முதுகு தண்டை போல நீண்டு கிடக்கும் இந்த சாலையின் இப்போதைய கதி? மெட்ரோ ரயில் சினேகிதர்களின் கைங்கர்யத்தில் உருவான பள்ளம் மேடுகள்தான். கடந்த வாரம் நள்ளிரவில் சாலை அப்படியே ஓரிடத்தில் உள் வாங்கிக் கொண்டதாகவும் சொல்கிறார்கள். நல்லவேளையாக அந்த நேரத்தில் ஒரு டூ விலர் கூட அந்த இடத்தை கிராஸ் செய்யாதது ‘அம்மா’ செஞ்ச புண்ணியம். இல்லையென்றால் சட்டசபையில் அதற்கும் ஒரு வாக்குவாதம், வெளிநடப்புகள் அரங்கேறியிருக்கும். விடுங்கள்… நாம் சொல்ல வந்தது வேறொன்றை பற்றி.

கவுதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்தின் ஷுட்டிங் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக இங்குதான் நடைபெற்று வருகிறது. அதுவும் நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல்! அரசு அலுவலகங்களில் முறையாக அனுமதி பெற்று நடத்தப்பட்டாலும், ரசிகர் கூட்டத்திற்கு அஞ்சி கமுக்கமாக வைத்திருக்கிறார்கள் விஷயத்தை. ஒரு படு பயங்கரமான சேசிங் காட்சியை இங்கு படமாக்கினாராம் கவுதம் மேனன். விடிய விடிய உறங்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார் அஜீத். அதிலும் ஒரு சிறிய காருக்குள் அஜீத் அமர்ந்து கொள்ள, ஒரு கேமிராமேன், சில லைட்மேன்கள் அசிஸ்டென்ட் டைரக்டர் என்று அவரை நெரிக்கிற சூழல் வந்தாலும், டேக் இட் ஈஸியாகிவிடுகிறாராம் அவர். ‘ஹையா… சொல்லிட்டீங்கள்ல. இன்னைக்கு நைட் பார்த்துருவோம்’ என்று கிளம்புகிற அஜீத் ரசிகர்களுக்கு… இந்த நைட் ஷுட்டிங் முடிஞ்சு ரெண்டு நாளாச்சு.

‘பொதுவா அஜீத் சார் இந்த படத்தின் மீது காட்டுற அக்கறை அவ்வளவு பிரமாதமா இருக்கு என்கிறது படப்பிடிப்பு குழுவிலிருந்து வரும் ரகசிய செய்தி. காலையில் மேக்கப் போட்டுக்க மட்டும்தான் கேரவேன் உள்ளே நுழையுறார். அதற்கப்புறம் அவர் லஞ்ச் அவர்ல கூட கேரவேன் பக்கம் போறது இல்ல. எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்துதான் சாப்பிடுறாங்க. சில நேரங்களில் இருபது முப்பது பேருக்கு தன் வீட்டிலிருந்தே உணவை வரவழைத்துவிடுகிறார். பொதுவா காலையில் ஆரம்பிக்கிற ஷுட்டிங்கை, ஈவ்னிங் ஆறு மணிக்கு பேக்கப் சொல்ல வச்சுருவாங்க மற்ற எல்லா ஹீரோக்களும். ஆனால் அஜீத் சார் அந்த விஷயத்தில் தலையிடுறதேயில்ல. சில நேரங்களில் ஷுட்டிங் ஆறு மணியையும் தாண்டி நள்ளிரவு 12 மணி வரைக்கும் கூட நடந்திருக்கு. அவர் முகம் சுளிச்சதேயில்ல’ என்கிறது அதே தகவல் சோர்ஸ்!

ஆமாம்… படத்துக்கு என்ன டைட்டில்? 500 க்கும் மேற்பட்ட தலைப்புகளை எழுதி இப்பதான் ஒண்ணு முடிவாகியிருக்கு. அஜீத் சாருக்கும் பிடிச்சுருக்கு. சீக்கிரம் அறிவிப்பு வந்துவிடும் என்கிறார்கள். கவுதம் மேனன் பாணியிலேயே சுத்த தமிழில் இருக்கும் என்பதுதான் இப்போதைய க்ளு!

உலகமே வெயிட்டிங்….

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கோடம்பாக்கத்தின் அம்பானியாகிறார் சேரன்!

சினிமாக்காரர்களுக்கு இது நல்ல நேரமா? இல்ல... கெட்ட நேரமா? என்றே தெரியவில்லை. அவர்கள் எடுக்கும் துணிச்சலான முடிவுகள் எங்கு கொண்டு போய் விடும் என்றும் புரியவில்லை. ஆனால்...

Close