ஒரேயடியாக சிம்புவை கழற்றிவிட்ட அஜீத்?
பீனிக்ஸ் பறவை போலாகிவிட்டார் சிம்பு. சுமார் மூன்று வருடங்களுக்கு பிறகு திரைக்கு வந்திருக்கும் அவரது வாலுவுக்கு நாடெங்கிலும் நல்ல ரெஸ்பான்ஸ். அண்டை மாநிலங்களிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு என்கிறார்கள் ரசிகர்கள். வாலுவை மையமாக வைத்து தோல் கிழிகிற அளவுக்கு மேளம் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் அஜீத் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும். சுபஸ்வரமும் அபஸ்வரமுமாக கலந்து கட்டி ஒலிக்கும் அவற்றை படித்தால், தலை கிறுகிறுக்கிறது.
இது ஒருபுறமிருக்க, ஏதோ திருவாரூர் தேரை பொக்லைன் வைத்து நகர்த்தியதற்கு ஒப்பாக, இந்த படத்தின் ரிலீசை ஆச்சர்யத்தோடும் வியப்போடும் எதிர்கொண்ட சக நட்சத்திரங்கள் அவருக்கு போன் போட்டு வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் இருக்கிறார்கள். சாதா நடிகர்களிலிருந்து, தகதக ஸ்டார் வரைக்கும் இந்த பாராட்டுகள் வந்து கொண்டிருக்க, ஒரு விஷயத்திற்காக ஆனந்தப்பட்டிருக்கிறார் சிம்பு. ரஜினியே இவரை வரச்சொல்லி வாழ்த்தியதுதான் அது! ரஜினி மட்டுமல்ல, லதா ரஜினியும் கூட சிம்புவை போனில் அழைத்து வாழ்த்து சொல்லியிருக்கிறார்.
ஒரு வால், ‘வாள்’ ஆன கதை இப்படியிருக்க, சிம்புவின் குருநாதர் அஜீத் மட்டும் வாயையே திறக்கவில்லை. தொலைபேசியில் கூட சிம்புவுக்கு வாழ்த்து சொல்லவில்லையாம் அவர். வாலு என்கிற விஷயத்தையே தன் மனதிலிருந்து அவர் டெலிட் பண்ணிவிட்டதாக கூறுகிறார்கள் இங்கே.
இதற்கெல்லாம் காரணம், வாலு விஷயத்தில் விஜய்யை ஹீரோவாக்கி, அஜீத்தை டம்மியாக்கியதுதான்! ஒருவரால் உதவி பெற்று பலன் அடைகிற போது அவருக்கு நன்றி செலுத்துவதில் தப்பில்லை. அதற்காக, ‘தமிழன்… மலையாளி… ’ என்றெல்லாம் இஷ்யூவை கிளப்பியதுதான் வருத்தத்தின் வேராக இருக்கக் கூடும் என்கிறார்கள் அவர்கள்.
குரங்கு மனசு.. எப்பிடி வேணும்னாலும் தாவும்..