ஆபரேஷன்- ஒரே நாளில் வீடு திரும்பினார் அஜீத்!!!! இதுதான்டா மிராக்கிள்ங்கிறது!
அஜீத்திற்கு எந்த மருத்துவமனையில் ஆபரேஷன் நடந்தது என்பதையே ரகசியமாக வைத்திருந்தது அவரது டீம். பலரும் அப்போலோ, எஸ்.ஆர்.எம் என்று ஆங்காங்கே அலைந்து கொண்டிருக்க, யாரும் எதிர்பாராத குமரன் மருத்துவமனையில் இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தி முடித்தது கோவை மற்றும் சென்னையிலிருக்கும் மருத்துவர்கள் குழு. இந்த மருத்துவமனை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது.
அஜீத்தின் முழங்காலில் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்த அதே மருத்துவர்கள் கோவையிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுடன் சென்னை மருத்துவ வல்லுனர்களும் இணைந்து கொள்ள, நேற்றிரவு நடந்து முடிந்தது ஆபரேஷன். இன்று காலையே டிஸ்சார்ஜ் ஆகி அவர் வீடு திரும்பிவிட்டார்.
வீட்டிலேயே பிரத்யேகமாக ஒரு மருத்துவமனை செட்டப் செய்யப்பட்டிருக்கிறதாம். இனிமேல் அவருக்கு தேவைப்படும் சிகிச்சைகளை அங்கு வந்து மேற்கொள்ள இருக்கிறார்களாம் மருத்துவர்கள். இதற்கிடையில் “தன்னை யாரும் நேரில் சந்திக்க வர வேண்டாம்” என்று கூறிவிட்டாராம் அஜீத். “எண்ணி வைத்துக் கொள்ளுங்கள். சரியா 21 வது நாள் நானே யார் உதவியும் இல்லாமல் நடந்து வந்து உங்களை சந்திக்கிறேன். அதுவரைக்கும் எனக்கு ஒத்துழைப்பு கொடுங்க. ப்ளீஸ்…” என்று அவர் கூறியதை கோடம்பாக்கத்தின் மிக முக்கிய பிரமுகர்களுக்கு தெரிவித்திருக்கிறது அஜீத் வட்டாரம்.
இந்த முறை நடந்த இரண்டு ஆபரேஷன்களையும் சேர்த்தால், அவரது உடம்பில் எட்டுக்கும் மேற்பட்ட ஆபரேஷன்கள் நடந்து முடிந்திருப்பதாக தெரிவிக்கிறது மருத்துவ குறிப்பு!
தமிழ் நாடே அடித்த மழையில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மக்கள் அனைவரும் வெள்ளத்தால் அவதி பட்டு கொண்டு உள்ளனர். இதில் எவனோ எங்கேயோ சிகிச்சை எடுத்து கொண்டானாம். அதை ஒரு செய்தியாக போட்டு உள்ளனர். அவன் பணக்காரன், கோடீஸ்வரன்.
ஆனால் ஏழைகளின் நிலைமை கேள்விக்குறி தான் ???
well said